மு.க.ஸ்டாலினையும்.. அவர் குடும்பத்தையும் சிறைக்கு அனுப்புவோம்.. வளர்மதி ஆவேசம்
சென்னை: ஊழலில் திளைத்த கட்சி திமுக, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினை சிறைக்கு அனுப்புவோம் என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 ஆயிரம் பேருக்கு குக்கர், சைக்கிள், தையல் மிஷின், சலவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் நடித்து வருகிறார். அவர் எப்போதும் ஃபேன் எதிரே உட்கார மாட்டார், உட்கார்ந்தால் அவர் தலையில் உள்ள முடி பறந்துவிடும்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் மு.க.ஸ்டாலினை சிறைக்கு அனுப்புவோம், அவரது குடும்பத்தாரையும் சிறைக்கு அனுப்புவோம். ஊழலில் திளைத்த கட்சி திமுக" கடுமையாக வசைபாடினார்,.