சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுக ஊழல் கட்சி என்றால்.. மத்த கட்சிகள் 100% பரிசுத்தமானவர்களா.. தமிழருவி மணியன் விளக்குவாரா?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK

    சென்னை: அமமுக ஊழல் கட்சி என்றால் மற்ற கட்சிகள் எல்லாம் 100 சதவீதம் ஊழலற்றவர்கள் என சொல்லிவிட முடியுமா. இதை தமிழருவி மணியன் விளக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவில் ஊழல் கறை படியாத கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்தளவுக்கு ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.

    என்னதான் ஊழலை ஒழிப்பேன் என சிலர் கட்சிகளை தொடங்கினாலும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் ஊழல் செய்தால் அது கட்சிக்கே அவப்பெயராகிவிடும்.

     Rajinikanth: ரஜினி ரெடியாய்ட்டார் போல.. சரி கூட்டணி இப்படி இருக்குமா.. ஆத்தாடி என்னா ஒரு பிளானு! Rajinikanth: ரஜினி ரெடியாய்ட்டார் போல.. சரி கூட்டணி இப்படி இருக்குமா.. ஆத்தாடி என்னா ஒரு பிளானு!

    ஊழலின்மை

    ஊழலின்மை

    இது போல் ஊழலற்ற ஆட்சி என்ற தாரக மந்திரத்துடன் கமல்ஹாசனும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிலரும் கட்சியை தொடங்கினர். இதில் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கெஜ்ரிவால் ஆட்சியே தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதற்கு காரணமாக ஊழலின்மை சொல்லப்படுகிறது.

    ரஜினி கட்சி

    ரஜினி கட்சி

    அது போல் ரஜினிகாந்தும் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரும் நோக்கத்துடன் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவர் முடிவெடுப்பார். பாமகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அதிமுகவில் இரு முக்கிய பிரமுகர்கள் ரஜினி கட்சியில் சேரவுள்ளனர் என்றும் தமிழருவி தெரிவித்திருந்தார்.

    சந்தேகம் இல்லை

    சந்தேகம் இல்லை

    அதே வேளையில் அமமுக ஊழல் கட்சி என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதை ரஜினி விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். ரஜினிகாந்த் அனைவராலும் மதிக்கப்படக் கூடியவர். எனவே அவர் கட்சி தொடங்கினால் அந்த கட்சியில் ஏற்கெனவே மற்ற கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளும் இணைவர் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியிருக்கையில் கட்சியில் இணைய வருவோரையும் கூட்டணி வைக்க வருவோரையும் ஊழல் என்ற வட்டத்தில் அடைத்து எப்படி புறந்தள்ள முடியும்?

    தனித்து ஆட்சி

    தனித்து ஆட்சி

    எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இதற்கு ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன? அமமுக ஊழல் கட்சி என்றால் ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு இணையவுள்ளதாக தமிழருவி பட்டியலிடும் கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லை என கூறிவிட முடியுமா. தமிழருவி சொல்லும் பாமக மீதும் ஊழல் புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றன. இதை தமிழருவி மணியன் விளக்கினால் மட்டுமே ரஜினியுடன் கூட்டணி வைப்பதற்கான வரையறை என்னவென மற்ற கட்சிகளுக்கு தெரியவரும்.

    சுத்தமானவர்களா

    சுத்தமானவர்களா

    அதேபோல ரஜினியுடன் நெருக்கம் பாராட்டி வரும் பல திராவிடக் கட்சிகளின் பிரமுகர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. அதெல்லாம் தமிழருவி மணியனுக்கே நல்லாத் தெரியும். அப்படிப்பட்டவர்கள்தான் ரஜினி கட்சியை இயக்கப் போகும் முக்கியஸ்தர்களாக கூறப்படுகிறது. இப்படிப்பட்டநிலையில், கூட இருப்பவர்களிடமே ஏகப்பட்ட கறைகள் படிந்துள்ளநிலையில் அடுத்த கட்சியை ஊழல் கட்சி என்று எந்த அடிப்படையில் தமிழருவி மணியன் கூறுகிறார் என்றும் புரியவில்லை.

    English summary
    If AMMK is corruption party then Tamilaruvi Manian may explain about other parties to whom with Rajinikanth going for alliance?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X