சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரும் தேர்தலில்..மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது.. திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் எவராலும் காப்பாற்ற முடியாது என பேசினார்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது:-

 "ஸ்டாலின் இருக்கிறார்.. பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது!" கி.வீரமணி பேச்சு

கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்

கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்

எறத்தாழ 35 ஆண்டுகளாக நான் வீரமணி அவர்களை அறிவேன். கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் பெரியார் திடலுக்கு வருவதும் அவரை பார்ப்பதும் அவரது உரைகலை கேட்பதும் வாய்ப்பு கிட்டினால் அவரை சந்தித்து பேசுவதும் என்கிற வகையில் 1985-86 கால கட்டத்தில் அவரை அணுகி நெருக்கமாக இருந்து கவனிக்க கூடிய வாய்ப்பை பெற்றேன். அப்ப்போது வீரமணிக்கு அவர்களுக்கு வயது 55. 35 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 90- ஐ தொட்டு இருக்கிறார்.

90 வயது இளைஞர் வீரமணி

90 வயது இளைஞர் வீரமணி

அப்போது எந்த அளவுக்கு வேகமும் சுறு சுறுப்பும் இருந்ததோ அதில் எள் அளவும் குறையவில்லை என்பதுதான் இன்றைக்கு நாம் பார்க்கிற வியப்புக்குரிய விஷயமாக உள்ளது. மலைப்பாக இருக்கிறது வீரமணி அவர்களின் உழைப்பு. தமிழ் மண்ணை பாதுகாக்க வேண்டும், சமூக நீதியை பாதுகாகக் வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு 90 வயதான இளைஞரான வீரமணி அவர்கள் நமக்கு ஒரு மெசேஜ் கொடுத்திருக்கிறார். 2024-ல் வரவிருக்கும் பொதுத்தேர்த்ல் வெறும் அரசியல் தேர்தல் அல்ல.;

 நேற்று உருவானது அல்ல

நேற்று உருவானது அல்ல

2024 தேர்தல் குறித்து இப்போதே நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பிறந்த நாள் செய்தியாக இதை சொல்கிறார். 2024- ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தல் ஓர் அரசியல் தேர்தல் அல்ல. அவை ஒரு பரம்பரை யுத்தமான சமூக போரின் புதிய பரிணாமாகவே பார்க்க வேண்டும். ஒரு பரம்பரை யுத்தமான... இன்று நேற்று உருவானது அல்ல.. பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிற தத்துவப் போர். ஒரு பரம்பரை யுத்தமான சமூக போரின் புதிய பரிணாமாகவே பார்க்க வேண்டும்.

10 சதவீத இட ஒதுக்கீடு

10 சதவீத இட ஒதுக்கீடு

திராவிடர் கழகம் என்பது தேர்தல் இயக்கம் அல்ல. ஆனாலும் தேர்தலில் நிற்கும் கட்சிகல் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்று கருதாமல் வரும் நாடாளுமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. அது பரம்பரைகளுக்கு இடையேயான தத்துவ போருக்கான புதிய பரிணாமாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூக நீதியை விரட்ட ஒரு தந்திரத்தை ஆர்.எஸ் எஸ் உருவாக்குகிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும்.

காங்கிரஸ் கட்சியின் பார்வை வேறு

காங்கிரஸ் கட்சியின் பார்வை வேறு

ஏழை எளிய மக்களுக்கு என அதாவது கம்யூனிஸ்ட் கட்சி பார்வையில் இதை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை வேறு. ஆதரிக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் பார்வையும் வேறு. ஏழை மக்களுக்காக செய்யட்டும் என்ற அடிப்படையில் ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்சிகள் எடுக்கிறார்கள். இவர்கள் பார்வையும் அவர்கள் பார்வையும் ஒன்றல்ல..

இது தான் அவர்களின் மறைமுக செயல் திட்டம்

இது தான் அவர்களின் மறைமுக செயல் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் பார்வை என்பது ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பார்வையல்ல... உயர்ந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, இதை பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் முன்னேறிய வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதுதான். அதைவிட முக்கியமாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது சரியானது என்ற வாதத்தை உருவாக்கி அதன் மூலம் சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதுதான். இதுதான் அவர்களின் மறைமுக செயல் திட்டம்.

எவராலும் காப்பாற்ற முடியாது

எவராலும் காப்பாற்ற முடியாது

பாஜக என்பது ஒரு சராசரியான தேர்தல் அரசியல் கட்சி அல்ல. தேர்தலில் வெற்றி தொண்டு செய்ய வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் வர்ணாசிரம பாகுபாட்டை நிலைப்படுத்த வேண்டும் என்பதுதான். 2024-ல் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் 40-வது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 3 ஆ ம் இடத்தில் இருந்த திமுகவை முதலிடத்திற்கு கொண்டு வந்து வெற்றி பெற வைத்தவர் ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் பேசினார்.

English summary
Dravida Kazhagam president K. Veeramani's birthday celebration was held in Chennai. Speaking on this, Thirumavalavan said that no one can save BJP if it comes back to power in the 2024 parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X