சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே? என்ன செய்வார்கள்?

நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்பேன். அதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும்.

நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார். இதனால் இவர்கள் இருவரும் இணைய போகிறார்களா என்று கேள்வி எழுந்தது.

2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!

என்ன கேள்வி

என்ன கேள்வி

இந்த நிலையில் கமலின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசினார். அதில், மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அரசியலில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

வலிமைப்படுத்தி உள்ளது

வலிமைப்படுத்தி உள்ளது

இது இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற கேள்வியை வலுப்படுத்தி இருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் இவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவார்களா. ரஜினியும் கமலும் சினிமாவில் இருப்பது போலவே நிஜ அரசியல் உலகிலும் நட்பாக இருப்பார்களா என்று கேள்விகள் எழுந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட்டணி வைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், ஒருவேளை வெற்றியும் பெற்றால் யார் முதல்வர் ஆவார். ரஜினி அல்லது கமல் யார் விட்டுக் கொடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆசை உள்ளது

ஆசை உள்ளது

ரஜினி கமலின் இரண்டு பேருக்கும் முதல்வர் ஆசை உள்ளது. கமல்ஹாசன் பல மேடைகளில் தன்னுடைய முதல்வர் ஆசையை வெளிப்படுத்தி விட்டார். அதனால் இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படி உடன்படிக்கை ஏற்படும், சண்டை வராதா என்று விவாதங்கள் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிபெற்றால் மகாராஷ்ராவில் தற்போது சிவசேனா மற்றும் பாஜக இடையே நிலவும் அதே நிலைதான் உருவாகும். இரண்டு பேரும் முதல்வர் பதவிக்கு ஆசைபடுவார்கள். அது பெரிய அரசியல் சிக்கலுக்கு கூட வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

English summary
If Kamal Haasan and Rajinikanth join hands, who will lead the front in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X