சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியா.. விஜய்யா.. யாருக்கு எங்க ஓட்டு.. ஒத்த கேள்வி.. ஓங்கி பதிலளித்த வாசகர்கள்.. அதிரடி!

ரஜினி, விஜய் இருவரில் மக்களின் ஆதரவு யாருக்கு என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    சென்னை: காலமும் சூழலும்... விஜய் - ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து நம்மை பேச வைத்து வருகிறது.. ரஜினி வழியை பின்பற்றி வந்த விஜய், இன்று தனித்து பார்க்கப்படுகிறார்.. அவரது வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக உள்ளது.. அதனால்தான், விஜய், ரஜினிகாந்த் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியை முன் வைக்கும் அளவுக்கு சமதளத்தில் போட்டியில் நிற்கும் அளவுக்கு உருமாறி உள்ளனர்!

    டெல்லி தந்த அழுத்தம்தான், விஜய்யின் ரெய்டு என ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது... இது நேற்று, இன்று பிளான் இல்லை.. கிட்டத்தட்ட ஒரு வருஷமாக விஜய்யை குறிவைத்திருந்தனராம் ஐடி அதிகாரிகள்.

    மெர்சல் பட ஆடியோ விவகாரத்தில் ஜிஎஸ்டி வரியை பற்றி விஜய் கொளுத்தி போட அப்போதுதான் இது ஆரம்பமாக தொடங்கியது.. பாஜகவை விமர்சித்ததும் வழக்கம்போல் முதல் ஆளாக வந்து தன் எதிர்ப்பை "ஜோசப் விஜய்" என்று பதிவு செய்து எதிர்ப்பை காட்டினார் மூத்த தலைவர் எச்.ராஜா.

    விஜய் அரசியல்

    விஜய் அரசியல்

    ஆக விஜய்யின் பாஜக மீதான விமர்சனங்கள் தலைமையை கோபப்படுத்தி வரும் அதே வேளையில், அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், கருத்தினையும் ரஜினி பேட்டிகள் மூலம் வலுவாகவே தெரிவித்து வந்தார்.. இந்த போக்குதான் "ரஜினி அரசியல் & விஜய் அரசியல்" என்ற தனி பாணியை ஏற்படுத்தியது.

    பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    எப்போது விஜய் மீது பாஜகவுக்கு கண் விழுந்ததோ, அப்போதே மக்கள் மன்ற நிர்வாகிகளிடம், இனி எதை செய்தாலும் அதற்கு முறையான கணக்கு வழக்குகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.. இதை தவிர, உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் சிலர் வெற்றி பெற்றது விஜய் தரப்பை மேலும் குஷிப்படுத்தியது. இதற்கு இடையில் பிரஷாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேசிவிட்டு நம்பிக்கை தந்தது வேறு விஷயம்.

    ரெய்டு

    ரெய்டு

    இதெல்லாம் தான் பாஜகவை உறுத்தியது.. ரஜினியை தூக்கி வைக்கவும், ரஜினிக்கான ஆதரவை தெரியப்படுத்தவும் விஜய்யை தேவையில்லாமல் குற்றவாளி போல் சித்தரித்து.. பரபரப்பை கூட்டி.. ரசிகர்களை டென்ஷன் ஆக்கி.. கடைசியில் புஸ்ஸென்று ரெய்டை காட்டிவிட்டது. இந்த சமயத்தில்தான் ரஜினி, விஜய் அரசியலின் வருகையும் ஒப்பீடும் மக்களால் அதிகமாக கவனிக்கப்பட்டது.

    யாரை ஆதரிப்பீங்க?

    யாரை ஆதரிப்பீங்க?

    அந்த வகையில் நாமும் ஒரு சர்வேயை எடுத்தால் என்ன என்று தோன்றியது.. ரஜினிகாந்த் - விஜய் அரசியலுக்கு வந்தால் யாரை நீங்க ஆதரிப்பீங்க என்று நம் வாசகர்களிடம் கேட்கப்பட்டது. விஜய்-க்கு 41.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. ரஜினிக்கு 19 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர்.. இருவரையும் என்று 2.13 சதவீதம் பேரும், யாரையுமே ஆதரிக்க மாட்டேன் என்று 37.19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதில் விஜய்யின் ஆதரவு அமோகமாக உள்ளது.. இதற்கு காரணங்கள் பல இருக்கலாம்.. அதேபோல ரஜினிக்கு வாக்கு குறைந்துள்ளது.. ஒருவேளை அவரது நீண்ட இழுபறி அரசியல் வருகை, சர்ச்சை பேட்டிகளும் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கலாம்.. ஆனால் யாரையுமே ஆதரிக்க மாட்டோம் என்பதை விட ரஜினிக்கு ஆதரவான வாக்குகள் பதிவாகி உள்ளது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

    கணிப்பு

    கணிப்பு

    ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க தயாராகிவிட்ட நிலையில், அரசியல் வருகை பற்றி துளியும் அறிவிக்காத விஜய்க்கு மகத்தான ஆதரவு என்பது வியப்பாகவே உள்ளது. இது அவரது ரசிகர்களின் ஆதரவா? அல்லது மக்களின் ஆதரவா என்பதுதான் தெரியவில்லை.. எனினும், இது ஒரு கணிப்புதான்.. நிஜ நிலவரத்தை நம் மக்களே வழக்கம்போல் முடிவு செய்வர்!

    English summary
    If Rajinikanth and Vijay get into politics, who can get the most public support
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X