சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக, அதிமுகவை விடுங்க.. ரஜினிகாந்த் சந்திக்க போகும் சவால்கள் என்ன.. எப்படி சமாளிப்பார்?

புது கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகி உள்ளது... இதையடுத்து, தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், அவர் சந்திக்கப் போகும் சவால்கள் மற்ற கட்சிகளுக்கு வருவதை விட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய, தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஒருவேளை அதுதான் ரஜினிகாந்த் கட்சியாக இருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால், தன்னுடைய கட்சி, சின்னம், போன்றவற்றை 2 வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி தேர்வு செய்ததாகவும் இன்னும் சிலர் சொல்கிறார்கள். எல்லாமே இதுவரை ஊகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

 "வருகிறார்" ரஜினி.. யாரையெல்லாம் கதற விடுவார்.. அவருக்கு யார் தண்ணி காட்டுவா.. செம எதிர்பார்ப்பு!

 சாதகம்

சாதகம்

வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தியே ரஜினி இந்த கட்சியை ஆரம்பிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.. மக்களுக்கான அரசியலாக அவர் இதை கையளாவில்லை. மாறாக தனக்கு சாதகமான முறையில் அரசியலுக்கு அவர் வர விரும்புகிறார். ரஜினி வருவதால் திமுகவுக்கு சிக்கல், அதிமுகவுக்கு விக்கல் என்று பலர் சொன்னாலும் கூட ரஜினிக்குத்தான் அதிக சவால்கள் காத்திருக்கின்றன.

வாய்ப்பு

வாய்ப்பு

ரஜினி எதிர்நோக்கும் சவால்கள் என்னவென்றால், முதலாவதாக, அவரது உடல்நலம் சார்ந்த பிரச்சனை.. ரஜினிக்கு உடல்ரீதியாக பல தொந்தரவுகள் இருக்கின்றன. அவரால் புயல் வேக பிரச்சாரம் செய்ய முடியாது. சாத்தியமும் இல்லை. அதை அவரே சொல்லியும் இருக்கிறார். தமிழகம் முழுவதும் நிச்சயம் அவரால் சுற்றி வர முடியாது. வாய்ப்பே இல்லை.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

அதனால் தேர்தல் களத்தில் ரஜினியை இறக்கிவிட குடும்பத்தினருக்கும், நலம்விரும்பிகளுக்கும் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இருப்பினும் தற்போது அவர் அரசியலுக்கு வந்துள்ளதால் அவரது பிரச்சாரம் எந்த மாதிரி இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களை மற்ற தலைவர்களைபோல, மற்ற தேர்தல் நேரங்களை போல ரஜினியால் சென்று சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.. இதுதான் பெரிய சிக்கல்..

ரஜினி

ரஜினி

மக்களை சந்திக்காமலேயே ஒருவர் வெற்றி பெற முடியும் என்றால் நிச்சயம் அது கனவில்தான் சாத்தியம் அல்லது சினிமாவில் சாத்தியம். நிஜத்தில் நிச்சயம் வாய்ப்பே இல்லை. 3 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களை சந்திப்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்டுள்ளார். அதற்கு ஒருசிலர் ஜனவரியில் கட்சி ஆரம்பித்தால், அடுத்த நான்கு மாதம் கூட போதும்.. நீங்கள் நேரில் சென்று பிரசாரம் செய்ய தேவையே இல்லை.. வீடியோ கான்பரன்ஸ் மூலமே மக்களை சந்திக்கலாம் என்று சொல்லி உள்ளனர்..

மறுப்பு

மறுப்பு

அவர்கள் ரஜினி மீது வைத்துள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் அப்படிக் கூறியுள்ளனர். ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லையாம்.. காரணம் அவருக்கு மக்களை நன்றாகப் புரிந்துள்ளது. இதற்கு ரஜினி உடனடியாக மறுத்துள்ளார்.. மக்களை சந்திக்காமல் இருக்க கூடாது, நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னராம்.. அதற்கு நிர்வாகிகள், அப்படியானால், 5 மண்டலங்களில் ஹெலிகாப்டர் வாயிலாக போய் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று சொல்லி உள்ளனர்.

கூட்டணி

கூட்டணி

இப்படி காஸ்ட்லி பிரச்சாரம் மேற்கொண்டால், அதாவது பிரதமர் மோடிசெய்வதைப் போல செய்தால், மக்கள் அதையும் ஏற்பார்களா என்று சொல்ல முடியாது. காரணம் அதைச் சொல்லிச் சொல்லியே திமுக கூட்டணியினர் ரஜினிக்கு எதிரான கருத்தை பரப்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கட்சியினரை சந்தித்தாலும் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது நிச்சயம் அந்த சமயத்திற்கேற்றார் போல மக்களை சந்திப்பார் என்பது உறுதி.

மைனஸ்

மைனஸ்

எப்படி பார்த்தாலும், மக்களோடு மக்களாக நின்று அவர்களுடன் கலந்துரையாடி, வாக்கு கேட்ட தலைவர்கள்தான் ஆட்சியை பிடித்துள்ளனர்.. அரசியல் தலைவர்களே அப்படி என்றால், ரஜினி மிகப்பெரிய புள்ளி.. கிட்டத்தட்ட 45 வருஷத்துக்கும் மேலாக, ரஜினியை நேரில் பார்க்க துடிப்பவர்கள் கோடானுகோடி பேர் இருக்கும்போது, கட்சியை ஆரம்பித்துவிட்டு, மக்களை சந்திக்காமல் ஓட்டு கேட்பது ரஜினிக்குதான் மைனஸாக அமையும்.

பாஜக

பாஜக

இதற்கு அடுத்தபடியாக ரஜினிக்கு கூட்டணி சிக்கல் இருக்கிறது.. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவருக்காக ஒரு கும்பலே காத்து கிடக்கும்போது, நிச்சயம் ரஜினியுடன் கை கோர்க்க பலர் முன்வருவர்... லிஸ்ட்டில் முதலிலேயே வருவது பாஜகவாகத்தான் இருக்கும்.. அடுத்து அமமுக உள்ளது.. ஏன் பாமக கூட வர நேரிடலாம்.. எல்லாவற்றிற்கும் மேலாக கமல் இருக்கிறார்.. இதுபோக தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசு போன்ற நலம் விரும்பிகள் உள்ளனர்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதில் யாருடன் ரஜினி சேருவார், யாருடன் சேர்ந்தால், அவரது ஆன்மீக அரசியல் பயணம் சிறக்கும் என்பது இனிமேல் தான் தெரியும். இவர்களில் யாருடன் சேர்ந்தாலும், திமுகவில் ஸ்டாலின் வலிமை பொருந்தி உள்ளார்.. தன்னை நிரூபித்த தலைவராக அவர் ரொம்ப ஸ்டிராங்காக இருக்கிறார். உண்மையில் ரஜினி சந்திக்கப் போகும் பெரிய சவால் இந்த ஸ்டாலின் வலிமையை ஆட்டம்காணச் செய்ய வைப்பதாகத்தான் இருக்க முடியும்... திமுகவுக்கு எதிராக மிக மிக சொகுசான ஒரு எதிர்ப்பு ஆயுதமாக ரஜினி கொண்டு வரப்படுகிறார்.. ஆனால் தன் முன் உள்ள சவால்களை தாண்டி அவர் எப்படி வெல்லப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரியது.

English summary
If Rajinikanth starts the party, what are the challenges he will face
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X