சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு வகுந்த வியூகங்களால், மாநிலத்தில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா 2-ம் அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 CT கருவிகளுடன் கூடிய Post Covid Centre-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

If the 2nd wave of Corona comes,Tamil Nadu government is ready to face: Minister Vijayabaskar

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Post Covid Centre-க்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிகிச்சைக்காக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் முப்பரிமாண முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா 2-ம் அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

If the 2nd wave of Corona comes,Tamil Nadu government is ready to face: Minister Vijayabaskar

பிற நபர்களைப் போல் அரசு இயந்திரம் வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படவில்லை(ஸ்டாலினை மறைமுகமாக சாடினார்). பெருந்தொற்று காலத்திலும் களத்துக்கு சென்று அரசு பணியாற்றி வருகிறது.

கொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார் கொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்

தமிழ்நாடு அரசு முன்கூட்டியே எடுத்த வியூகங்களால் மாநிலத்தில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும் . துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது" இவ்வாறு பேட்டியின் போது தெரிவித்தார்.

English summary
Minister Vijayabaskar said that If the 2nd wave of Corona comes ,Tamil Nadu government is ready to face . now controlled coronavitrus in the state before govts preplaned action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X