• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோயில் குளத்து தண்ணியில் 2 மாலை இணைஞ்சுருச்சுன்னா.. அற்புதமான மணவாழ்க்கையாமே!

|

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம்னு ஒரு சீரியல். அதுல ஜனனி மனசுக்குப் பிடிக்காம சந்தோஷ் கூட கல்யாணம் நடக்குது. சரி ரெண்டு பேரும் அப்புறமா பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்றாங்க.

அதுக்குள்ளே மாரியாத்தா கோயிலில் ஒரு அம்மாவுக்கு அருள் வந்துருது. ரெண்டு பேருக்கும் தோஷம் இருக்கு... இன்னொரு தாலி கட்டிக்கிட்டா அந்த தோஷம் போயிரும்.

ரெண்டாவது தாலியும் கட்டிக்கிட்டா ரெட்டை குழந்தை பொறக்கும்னு மாரி ஆத்தா சொல்றான்னு அருள்வாக்கு சொல்றாங்க...

[Read more: வா.. சரி போ.. கூந்தல் மணம் கிறங்கடிக்குது.. கண் திறந்து ரசி.. அடடா அடடா ரொமான்ஸ்!]

குளத்தில் முங்கி

குளத்தில் முங்கி

உடனடியாக திருமண தம்பதியரை கோயிலுக்கு அழைச்சுக்கிட்டு போறாங்க. அங்க கழுத்துல மாலையோடு மூணு தடவை குளத்துல முங்கி எழுந்திரிக்க சொல்றாரு ஐயர்.

அருமையான குளம்

அருமையான குளம்

அந்த கோயில் புராதன கும்பகோணம் பக்கம் கோயிலா இருக்கும் போல. மிகப் பழமையான குளம். குளத்துல தண்ணி அருமையா இருக்கு. ஜனனியும், சந்தோஷும் உம்முன்னு முகத்தை வச்சுக்கிட்டு, மூணு தடவை முங்கி எழுந்திரிக்கறாங்க.

பாதுகாப்பா சீன் வைங்க

பாதுகாப்பா சீன் வைங்க

இந்த விஷயம் கொஞ்சம் கஷ்டம்தான்... கோயில் குளம் தூறு வாரி எவ்ளோ வருஷமாச்சோ..இது அபாயகரமான சீன்தான். இருந்தாலும் என்ன பாதுகாப்பு வச்சாங்களோ, என்னவோ பாதுகாப்பா பொண்ணு மாப்பிள்ளை முங்கி எழுந்தாச்சு.

ஃபேவரைட் சீன்

ஃபேவரைட் சீன்

ரெண்டு மாலையையும் கழட்டி குளத்துல விடுங்க. ரெண்டும் சேர்ந்துச்சுன்னா உங்க மண வாழ்க்கை சிறப்பா இருக்கும், ஆத்தா அருள் வாக்குப்படி ரெட்டைக் குழந்தை பிறக்கும்னு ஐயர் சொல்றார். ஜனனியும், சந்தோஷும் மாலையை கழட்டி குளத்துல மிதக்க விடறாங்க.

ஐ.. சேர்ந்துருச்சே!

ஐ.. சேர்ந்துருச்சே!

மாலை சேருமான்னு குடும்பமே திக்திக்ன்னு பார்க்க, ஜனனி சந்தோஷ் முகத்துல நோ ரியாக்ஷன்.ஆனா பாருங்க மாலை ரெண்டு இதயம் போல சேர்ந்துருது.குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. ஜனனி என்னைத் தப்பா நினைக்காதீங்க... எல்லாமே என்னை மீறி நடக்குதுன்னு சொல்றான் சந்தோஷ். ஜனனிக்கு பேச காசு குடுக்கணும் போல... முகத்துல என்னன்னு கண்டு பிடிக்க முடியாத அவ்ளோ வெறுமை.

அதுவும் முடிஞ்சுச்சு

அதுவும் முடிஞ்சுச்சு

குளத்துல லேசா மயக்கம் வந்துருது ஜனனிக்கு...அதாவது இந்த காட்சிகள் அவளை சங்கடப்படுத்துதாம். ரெட்டைக் குழந்தை பிறக்கும்னு அப்பா சந்தோஷமா இருக்காரே... அப்பாவோட இந்த சந்தோசம் நிலைக்காதுன்னு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவார்னு கவலைப் படறா. இந்த சமயத்துல ரெண்டாவது தாலியும் கட்டி முடிச்சுட்டாங்க.

கண்துடைப்பு

கண்துடைப்பு

முதலிரவுக்கு ஏற்பாடு செய்து இருப்பதை பார்த்து சந்தோஷ் அலறுகிறான்.எனக்கு எதுவும் தெரியாது ஜனனின்னு.. (எப்பவுமே ஆண்கள் பாவம் இப்படித்தான்.. பயந்துருவாங்க) எதுக்கு பயப்படறீங்க. வழக்கம் போல இதுவும் அவங்களுக்கு நம்ம கண்துடைப்பு நாடகம்தானேன்னு அசால்டா சொல்றா...

பெண்கள் எதையும் எதிர்கொள்ள, நிலைமையை சமாளிக்க துணிஞ்சவங்க... தெரிஞ்சவங்களாச்சே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
If the flower ring in the temple pool is connected, Life will be better, says a Tv serial.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more