சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட்டுக்கு போவேன்.. அனுமதி வாங்குவேன்.. வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.. வெற்றிவேல் உறுதி

வெற்றிவேல் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: "நான் உண்ணாவிரதம் இருக்க மட்டும் போலீசார் அனுமதிக்க மறுப்பது ஏன் என தெரியவில்லை.. அதனால நான் கோர்ட்டுக்கு போக போறேன்" என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்களும் தொகுதி பக்கம் போய் ஒரு வருடமாகி விட்டது. தொகுதி மக்கள் 18 பேர் மீதும் கோபமாக இருந்தால், 18 பேரும் அரசின் மேல் கோபமாக இருக்கிறார்கள்.

பேனரை கிழிச்சா என்ன... இதை தடுக்க முடியுமா... கெத்து காட்டும் விஜய் ரசிகரின் வைரல் வீடியோ! பேனரை கிழிச்சா என்ன... இதை தடுக்க முடியுமா... கெத்து காட்டும் விஜய் ரசிகரின் வைரல் வீடியோ!

 அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள்

ஒரு வருஷத்துக்கும் மேலாக எம்எல்ஏவாக பணியாற்ற முடியாததால், மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

 தங்க.தமிழ்செல்வன்

தங்க.தமிழ்செல்வன்

அதற்காக 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசை கண்டித்து தங்கள் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி ஆண்டிப்பட்டியில் தங்க.தமிழ்செல்வன் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தங்க தமிழ்செல்வனுடன் தொகுதி மக்களும் பங்கேற்றனர்

 அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இதேபோல வெற்றிவேலுவும் உண்ணாவிரதம் நடத்த உள்ளார். அதற்காக சென்னை அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் வரும் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும் போலீசில் கேட்டார். ஆனால் அந்த இடத்தில் போராட்டம் நடத்தகூடாது என்றும், குறிப்பாக அந்த இடத்தில் அனுமதி இல்லை என்றும் போலீசார் தெரிவித்து விட்டனர்.

 கோர்ட்டுக்கு போவேன்

கோர்ட்டுக்கு போவேன்

இதுபற்றி வெற்றிவேல் சொல்லும்போது, "மறைந்த ஜெயலலிதா கைதானபோதுகூட நான் இதே இடத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்படி இருக்கும்போது இப்போ மட்டும் ஏன் எனக்கு அனுமதி இல்லை. நான் கோர்ட்டுக்கு போவேன். இதை பற்றி முறையிடுவேன். அனுமதி வாங்கிக் கொண்டு திரும்பவும் இதே இடத்தில் உண்ணாவிரதம் இருப்பேன்" இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

English summary
If the police refuses me for Hunger Strike, I will go to the court: Vetrivel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X