சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மான ரோஷம் இருந்தால்...எஸ்வி சேகர்...சம்பளத்தை திருப்பித் தரவேண்டும்...அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்!!

Google Oneindia Tamil News

சென்னை: மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டசபை உறுப்பினராக எஸ்.வி. சேகர் பெற்ற 5 ஆண்டுகள் சம்பளம் மற்றும் பென்சனை திருப்பித்தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், திமுக எம்.எல்.ஏ. குக செல்வம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த ஜெயகுமார், ''அதிமுகவைப் பொறுத்த வரை ஜனநாயகம் தழைத்தோங்கும் கட்சி. ஆனால் திமுகவில் சர்வாதிகாரம் நடக்கிறது. அங்கு குடும்ப ராஜ்ஜியம். அந்த குடும்ப ராஜ்ஜியத்தில் அதிருப்தியின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களின் குமுறல். அதன் வெளிப்பாடுதான் குக செல்வம் வெளியே வந்துள்ளார். ஆரம்பம்தான் குக. செல்வம்'' என்றார்.

 If you any sense return your salary and pension says Minister Jayakumar to SV Sekar

செய்தியாளர்களில் ஒருவர், ''அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்" நேரு கூறி இருக்கும் எஸ்.வி.சேகருக்கு உங்களது பதில் என்னவென்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ''இவர் உண்மையில் மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அம்மா இவரை அடையாளம் காட்டினர். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அம்மாவால், அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், ஐந்து வருட சம்பளத்தை அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கணும். தற்போது எம்.எல்.ஏ. க்களுக்கான பென்சன் வாங்குகிறார். அதையும் இவர் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இவை இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் தமிழநாட்டு மக்களிடம் அவர் பேசும் பேச்சுக்கள் மக்களிடம் எடுபடாது'' என்றார்.

 ராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள் ராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள்

English summary
If you any sense return your salary and pension says Minister Jayakumar to sv Sekar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X