சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு!

பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதன்பின்

கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் போன 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

வயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா? ஆத்தூரில் பரபரப்பு! வயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா? ஆத்தூரில் பரபரப்பு!

தற்கொலை குறிப்பு

தற்கொலை குறிப்பு

இப்படி நாலா பக்கமும் விசாரணை நடந்துவரும் நிலையில், பாத்திமாவின் செல்போன், லேப்டாப்களும் தடவியல் துறையினரால் ஆராயப்பட்டு வருகிறது. இதில், தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல, செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானதுதான் என்றும் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 கேள்விகள்

13 கேள்விகள்

இதனிடையே, பாத்திமாவின் தந்தை லத்தீப் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌‌ஷனர் ஈஸ்வர மூர்த்தியை சந்தித்து பேசியிருந்தார். மேலும், "என் மகளின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது.. இந்த வழக்கில் 13 கேள்விகள் எனக்கு இருக்கிறது.. தற்கொலைக்கான அறிகுறிகள் எனது மகள் உடலில் இல்லை. முறையான விசாரணைதான் எனக்கு இப்போது தேவை" என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கோரிக்கை

கோரிக்கை

மேலும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஏற்கனவே மனு அளித்திருந்தார்.

உத்தரவு

உத்தரவு

இந்நிலையில், சென்னை ஹைகோர்ட்டில் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம், கேரளத்தை சோந்த முகமது சலீம் ஆகியோா் தனித்தனியாக பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தனா். அதில்,"கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சென்னை ஐஐடி.யில் 14 மாணவா்கள் மா்மமான முறையில் இறந்துள்ளனா். அதனால் பாத்திமா மரணம் உள்பட 14 பேர் இறந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தனர். ஆனாலும், பாத்திமா லத்தீப் மரணம் தொடா்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஹைகோர்ட் கடந்த 13-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

"இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு போதிய ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது. பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். சரியாக படிக்காத மாணவர்களை, ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை, பேராசிரியர்களுக்கு உண்டு. சென்னை ஐஐடி மட்டுமல்லாமல், மற்ற ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களின் தற்கொலைகளையும் தடுக்க தீர்வு காண வேண்டும். மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க கூடிய நிரந்தர தீர்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க இதுவே சரியான நேரம்" என தீர்ப்பில் கூறியிருந்தது.

தமிழக அரசு

தமிழக அரசு

இந்நிலையில், பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் ஒப்புதலை தொடர்ந்து, இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
iit student fathima death: student fathima suicide case transferred to CBI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X