சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்திமாவோட அன்லாக் செல்போன், லேப்டாப்.. தந்தையின் கண் முன்பாகவே.. தடயவியல் துறை ஆய்வு

மாணவி பாத்திமா லத்தீப் தந்தை சென்னை வந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Fathima latheef's father met Chennai police commissioner Viswanathan

    சென்னை: "என் மகளின் செல்போன், லேப்டாப் எங்க கிட்ட இருக்கு.. அதில் பாஸ்வேர்ட் போடப்பட்டுள்ளது.. அவைகளை அன்லாக் செய்து.. ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்று பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் கண்முன்னாடியே பாத்திமாவின் லேப்டாப், செல்போன்களை தடவியல் துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.

    சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தந்தை அப்துல் லத்தீப் விசாரணைக்காக மீண்டும் தடவியல் துறைக்கு வந்திருந்தார்.

    கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் போன 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

    துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை! துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை!

    விசாரணை

    விசாரணை

    இப்படி நாலா பக்கமும் விசாரணை நடந்துவரும் நிலையில், பாத்திமாவின் அப்பா திரும்பவும் சென்னை வந்துள்ளார். இவரிடம் பாத்திமாவின் செல்போன், லேப்டாப் போன்றவை இருக்கிறதாம். இந்த செல்போன், மற்றும் லேப்டாப்பில்தான் நிறைய தகவல்கள், பாத்திமாவின் மெயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

    செல்போன்

    செல்போன்

    ஆனால், லேப்டாப்பும், செல்போனும், பாஸ்வேர்டுகள் போடப்பட்டு உள்ளன. அதை ஓபன் செய்து ஆய்வு செய்ய சிரமமாக இருந்தது. அப்படி பாஸ்வேர்ட் ஓபன் செய்து ஆய்வு செய்தால், அதனை தங்கள் கண்முன்தான் ஆய்வு செய்ய வேண்டும் என பாத்திமா பெற்றோர் கோரிக்கை விடுத்து, டிஜிபி, தடயவியல் துறைக்கு ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.

    சம்மன்

    சம்மன்

    அதன்படி, எழும்பூர் கோர்ட் ஒப்புதல் அளித்து, பாத்திமாவின் தந்தை மற்றும் சகோதரிக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த சம்மனை அனுப்பப்பட்டதை அடுத்து, பாத்திமாவின் அப்பாவும், சகோதரியும் சென்னை தடவியல் துறைக்கு இன்று வந்தனர்.

    விசாரணை

    விசாரணை

    இந்த வழக்கின் விசாரணை அதிகாரியும் அங்கு வந்தார். போலீஸ் அதிகாரிகள், பாத்திமாவின் குடும்பத்தினர் முன்னிலையிலேயே செல்போன், லேப்டாப்கள் ஓபன் செய்யப்பட்டன. இந்த செல்போன், லேப்டாப்பின் பாஸ்வேர்ட்கள், பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவுக்கு தெரியும் என்பதால் எளிதாக அவைகள் ஓபன் செய்து பார்க்கப்பட்டன.

    பிரதமர்

    பிரதமர்

    இந்த வழக்கில் முக்கிய தடயமாக செல்போன், லேப்டாப் உள்ளதால், அதில் உள்ள தகவல்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். விசாரணை அதிகாரி மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பாத்திமாவின் அப்பா தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வரை திரும்பவும் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று பிரதமரையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

    English summary
    iit student fathima latheefs father has come to chennai and he asked permission meet tn cm
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X