சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு சீட்.. போன முறை தாமரை.. இந்த முறை உதயசூரியன்!

இந்திய ஜனநாய கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK IJK Alliance | உதயசூரியனில் போட்டியிட போகும் இந்திய ஜனநாயக கட்சி

    சென்னை: திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

    எந்த பக்கம் போவதென்றே தெரியாமல் தவித்து, குழம்பி, கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு திமுகவில் வந்து சேர்ந்தார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்.

    கடந்த முறை பாஜகவுடன் கூட்டு வைத்தார் பாரிவேந்தர். அப்போது பாஜக சார்பான தமிழக தேர்தல் செலவுகள் எல்லாவற்றையும் பாரிவேந்தர்தான் கவனித்து கொண்டதாக சொல்லப்பட்டது. மோடி வெற்றி பெற்றதும் டெல்லிக்கு சென்று கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டும் வந்தார்.

    ஆனால் அதோடு சரி.. வருஷம் ஆக ஆக பாஜக தரப்பில் யாருமே பாரிவேந்தரை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், உரிய மரியாதையும் தரவில்லை, கேட்ட தொகுதியையும் தர பாஜக மறுத்ததாக சொல்லப்பட்டது.

    இதுதான் கன்டிஷன்.. ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. கூட்டணிக்கு அதிக இடங்களை திமுக விட்டுத் தந்தது ஏன்? இதுதான் கன்டிஷன்.. ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. கூட்டணிக்கு அதிக இடங்களை திமுக விட்டுத் தந்தது ஏன்?

    மரியாதை இல்லை

    மரியாதை இல்லை

    ஆனால் அதோடு சரி.. வருஷம் ஆக ஆக பாஜக தரப்பில் யாருமே பாரிவேந்தரை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், உரிய மரியாதையும் தரவில்லை. அதோடு கேட்ட தொகுதியையும் தர பாஜக மறுத்ததாக சொல்லப்பட்டது.

    பாமக, பாஜக

    பாமக, பாஜக

    அதனால் 2 தினங்களுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாரிவேந்தர் அறிவித்தார். இதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று, பாஜக மீதான அதிருப்தி, இன்னொன்று தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழகம் மீதும் பல தொல்லைகளை தந்தது பாமக. அதனால் இந்த இருகட்சிகளுமே இப்போது ஒன்றாக இருப்பதாலேயே அதிமுக கூட்டணி பக்கம் போகாமல், திமுகவுக்கு வந்தார் பாரிவேந்தர்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இப்போது பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய ஜனநாயக கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து இந்த ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாமரை சின்னம்

    தாமரை சின்னம்

    அநேகமாக பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தருக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிட்டு, 3-வது இடத்தை பிடித்தார். அதனால் இந்த முறையும் இதே தொகுதிதான் வேண்டும் என்று கேட்கவும்தான், பாஜக அதற்கு மறுப்பு சொன்னது.

    இலவச மருத்துவ முகாம்

    இலவச மருத்துவ முகாம்

    ஆனாலும் விடாமல் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை தற்போதுவரை சம்பாதித்து வைத்து உள்ளார். அதனால் திமுக அநேகமாக பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கும் என்றே தெரிகிறது.

    English summary
    DMK allocate one Loksabha seat for Parivendhar's IJK Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X