சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றி பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Perambalur Constitution: பெரம்பலூரில் அபார வெற்றி பெற்ற ஐஜேகே பாரிவேந்தர்- வீடியோ

    சென்னை: ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றியை பெற்றுள்ளார் பாரிவேந்தர்! "நான் போக கூடாத இடத்தில போய் சேர்ந்தேன். ஆனா அந்த பாஜக கூட்டணியில நான் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. தாய், தந்தையை மறந்து விட்டு, ஏதோ ஒரு மாயை நம்பி சென்று விட்டேன்" என்று கடைசி நேர பிரச்சாரம் வரை புலம்பிய பாரிவேந்தர், திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றுள்ளார்!

    கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர். அப்போது தேர்தலின்போது, தமிழகம் சார்ந்த கூட்டணி கட்சியினரின் செலவுகளை மொத்தமாகவே கவனித்து கொண்டவர் என்றும் சொல்லப்பட்டது.

    ஆனால் சில காலமாகவே அக்கட்சியிலிருந்து விலகியே இருந்தார். பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், மரியாதை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வந்தார். இதில், ரொம்ப நாளாக கேட்டு வந்த பெரம்பலூர் தொகுதியை தர மாட்டோம் என்று சொல்லிவிடவும்தான், அப்செட் ஆனார்.

    ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. குமுறி குமுறி கதறிய சுயேச்சை! ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. குமுறி குமுறி கதறிய சுயேச்சை!

    உதயசூரியன்

    உதயசூரியன்

    கமல் கட்சி போனார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அப்படியே யூ-டர்ன் அடித்து, திடுதிப்பென ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடவும் ஒப்புக் கொண்டார். இதற்கு காரணம், பாரிவேந்தர் கேட்ட அதே பெரம்பலூர் தொகுதியை ஸ்டாலின் தர ஒப்புக் கொண்டதுதான்.

    இலவச மருத்துவ முகாம்

    இலவச மருத்துவ முகாம்

    பாரிவேந்தர், பெரம்பலூரை விடாமல் கேட்க காரணம், கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அந்த தொகுதியில் பாரிவேந்தர் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பதே.

    பெரம்பலூர்

    பெரம்பலூர்

    போனமுறையே 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றவர் பாரிவேந்தர். தோற்று போனாலும், பெரம்பலூர் மக்களுக்காக அவர் முன்னெடுத்த காரியங்கள் எப்படியும், 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர்

    முன்னாள் அமைச்சர்

    ஆனால் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், திமுகதான் முன்னிலையிலேயே இருந்தது. வேட்பாளர் சிவபதிதான் இவரை எதிர்த்து போட்டியிட்டவர். இவர் முன்னாள் அமைச்சரும்கூட. ஆனால் நேரம் ஆக ஆக, பாரிவேந்தரின் வாக்குகள் கூட ஆரம்பித்தன. அப்போதுதான் ஐஜேகே தரப்பில் மூச்சு விடவே ஆரம்பித்தனர்.

    நன்றிக்கடன்

    நன்றிக்கடன்

    பிறகு கடைசி நேரத்தில் சிவபதியை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுவிட்டார். போனமுறை செய்த செலவில் கால்பாகம்கூட இந்த முறை செய்யவில்லை என்றாலும், பாரிவேந்தர் செய்த நல்லவைகளை அந்த தொகுதி மக்கள் நன்றியாக வெளிக்காட்டி விட்டார்கள்.

    English summary
    In Perambalur Constitution, IJK Parivendhar won by 50 thousand votes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X