சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது!

முதல் வாக்குறுதியை நிறைவேற்ற போகிறாராம் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Perambalur Constitution: பெரம்பலூரில் அபார வெற்றி பெற்ற ஐஜேகே பாரிவேந்தர்- வீடியோ

    சென்னை: சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்! வெற்றி பெற்றவுடன் அவரது செயல்பாடுகளால் பெரம்பலூர் தொகுதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

    இங்க போறதா, அங்க போறதா என்று ஒரு பெரிய குழப்பத்துக்கு அப்பறம், திடீரென திமுகவில் வந்து இணைந்தார் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கணும், ஓகேவா என்று திமுக தலைமை கேட்க, அதற்கு சரியென்று ஒப்புக் கொண்டார். அதற்கேற்றபடி, பாரிவேந்தர் கேட்ட பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கி தந்தது திமுகவும்!

    பெரம்பலூர் தொகுதியில் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நிறைய பணிகளை இழுத்து போட்டு பார்த்தார் பாரிவேந்தர். குறிப்பாக, கிராம கிராமமாக சென்று இலவச மருத்துவ முகாம்கள் மூலம் மக்களின் மனங்களில் ஒட்டிக் கொண்டார்.

    ஓடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்ஓடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்

    நன்றி

    நன்றி

    அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை எதிர்த்துதான் இவர் களமிறங்கினார். 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இப்போ விஷயம் என்னவென்றால், பெரம்பலூர் மக்களுக்கு நன்றி சொன்ன கையோடு, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு விஷயத்தை நிறைவேற்ற போகிறார்.

    முக்கிய அறிவிப்பு

    முக்கிய அறிவிப்பு

    அதாவது, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 50 மாணவர்கள் விகிதம் மொத்தம் 300 மாணவர்களுக்கு, தன்னுடைய எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பினைதான் வெளியிட்டுள்ளார்.

    தேர்தல் வாக்குறுதி

    தேர்தல் வாக்குறுதி

    இது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். வருஷத்துக்கு 300 பேர் என்றால்கூட பதவியில் உள்ள 5 வருஷத்தில் 1500 மாணவர்களை இவரால் தொகுதியிலிருந்து உருவாக்க முடியும். இவர்கள் படித்து முடித்ததும், தன்னுடைய எஸ்ஆர்எம் நிறுவனத்திலேயே ஒரு வேலையை போட்டு தர போகிறாராம்.

    தண்ணீர் பிரச்சனை

    தண்ணீர் பிரச்சனை

    எம்பியாகி டெல்லி பக்கம்கூட இன்னும் போகலை. அதற்குள் முதல் வாக்குறுதி மெல்ல மெல்ல நிறைவேறி வருவதால், தொகுதி மக்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமில்ல, தண்ணீர் பிரச்சனையையும் பாரிவேந்தர் கையில் எடுத்துள்ளார்.

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    விவசாயிகள் விளைவித்ததை அவர்களிடமே கொள்முதல் செய்ய போகிறாராம். குடிநீர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது என இன்னும் நிறைய பிளான்கள் இவரிடம் உள்ளது. திமுக கூட்டணியில் முதல் எம்பியாக, முதல் நபராக, முதல் வாக்குறுதியை பாரிவேந்தர் நிறைவேற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது!

    English summary
    IJK President Parivendar asks Perambalur students to apply for free education
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X