சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்ஜியலட்சுமியில் தாமரை வைக்க வேண்டிய இடத்தில் துடைப்பம் வைத்த மக்கள்.. இல கணேசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    சென்னை: டெல்லி ஆட்சி பீடமான ராஜ்ஜியலட்சுமியில் தாமரை வைக்க வேண்டிய இடத்தில் துடைப்பத்தை மக்கள் வைத்துள்ளனர் என பாஜக எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கடந்த 8ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது ஆட்சியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி வரும் 16-ஆம் தேதி முடிவடைகிறது.

     Ila Ganesan says that Delhi people voted for broom stick instead Lotus

    இதையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

    இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை பாஜக தலைவர்கள் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாநிலங்களவை எம்பி இல கணேசன் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் கூறுகையில் டெல்லியின் ஆட்சி பீடம் ராஜ்ஜியலட்சுமி. இங்கு தாமரையை வைக்க வேண்டிய இடத்தில் துடைப்பத்தை டெல்லி மக்கள் வைத்துவிட்டனர்.

    அன்று 49 தொகுதிகளில் கூட ஜெயித்த பாஜக... இன்று சிங்கிள் டிஜிட்டுக்கே அல்லாடுதப்பா.. காங். கதையே வேற அன்று 49 தொகுதிகளில் கூட ஜெயித்த பாஜக... இன்று சிங்கிள் டிஜிட்டுக்கே அல்லாடுதப்பா.. காங். கதையே வேற

    துடைப்பம் ஆம் ஆத்மியின் சின்னமாகும். இது பாஜகவிற்கு பின்னடைவு என்று சொல்லமுடியாது. நாங்கள் கடந்த முறை பெற்றதை விட இந்த முறை அதிக இடங்களிலும், அதிக வாக்கு சதவீதமும் பெற்றுள்ளோம். இலவசங்கள், பொய் பிரசாரம் மூலம் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

    கெஜ்ரிவால் அறிவித்த இலவச தேர்தல் திட்டங்களுக்கும் பாஜக அறிவித்த தேர்தல் திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என இல கணேசன் தெரிவித்தார்.

    English summary
    BJP MP Ila Ganesan says that Delhi people voted for broom stick instead Lotus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X