சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வந்தால் பயப்பட வேண்டாம்.. எளிதாக வெல்லலாம்.. இளமாறன் சொல்வதை கேளுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வந்தால் யாரும் பயப்பட வேண்டாம், தைரியமாக மீளலாம் என தனது அனுபவங்களை இளமாறன் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

    அக்கம் பக்கத்தில் பேசினால் கூட Mask போடுங்க.. 6 அடி இடைவெளியை கடைபிடிங்க.. Dr Prakash

    இளமாறன் என்பவர் கொரோனா அனுபவத்தை மிக அழகாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலில் எந்த ஒரு நோயாக இருந்தாலும் மன தைரியம்தான் முக்கியம். அது இருந்தால்தான் மருந்து , மாத்திரைகள் வேலை செய்யும் என்பார்கள். அந்த மாதிரி இவரது ட்வீட்கள் மன தைரியத்தை கொடுப்பதாகவே உள்ளன. அவற்றின் தொகுப்பு வாசகர்களுக்காக:

    கொரோனாவில் இருந்து நான் மீண்டது எப்படி? ஏப்ரல் 30ல டெஸ்ட் எடுத்து மே 1ந்தேதி பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்துச்சு. ரேபிட் கிட், RT PCR இரண்டிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்து சரியாக 15ம் நாளில் மீண்டிருக்கிறேன். என்னோட அனுபவங்களை இங்கு பகிர்கிறேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு!

    இரண்டாம் நாள்

    இரண்டாம் நாள்

    முதல்கட்ட அறிகுறிகள் - உடல் அசதி (ஏப்ரல் 27-மே 2), காய்ச்சல் (99.4 - 100.7°c) இதுல முக்கியமான அறிகுறி காய்ச்சல்தான். இரண்டாம் நாளே டெஸ்ட் எடுத்துவிட்டேன், எவ்வளவு சீக்கிரம் உறுதிப்படுத்திக்கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நம் உடம்பில் viral load குறைக்கலாம்.

    ஸ்கிரீனிங்

    ஸ்கிரீனிங்

    மாநகராட்சி screening centeruku செல்வது நலம். உங்க உடம்புல எத்தகைய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுனு தெளிவாக சொல்லி anti biotic,vitamin,dolo மருந்துகளை உட்கொள்ள சொல்லுவாங்க. காய்ச்சல் 4 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவர்களை அணுகலாம்.

    நோயாளிகள்

    நோயாளிகள்

    mild symptoms நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளைவிட உடல்எதிர்ப்பு சக்தியே அதிக பலன தரும். அவற்றை பெருக்கும் வகையிலான உணவுகள்,பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள். இந்த வகையான நோயாளிகள்தான் சிகிச்சையில் அதிகமாக உள்ளனர். முதல் வார கவனிப்பும் உடல் ஒத்துழைப்பும் வைரஸ் வளராமல் பார்த்துக்கொள்ளும்.

    காய்ச்சல் 3 நாட்கள்

    காய்ச்சல் 3 நாட்கள்

    பெரும்பாலும் காய்ச்சல் 3 நாட்களுக்குள் மட்டுப்பட்டு 98°c க்குள் வந்துவிடும். இதன்பிறகு அடுத்தகட்ட அறிகுறிகளான சளி மற்றும் வாசனை முகர்வு இழப்பு இரண்டு நாட்களுக்குள் தெரிய ஆரம்பிக்கும். வறட்டு இருமலோடு வாசனை இழப்பும் மூக்கடைப்பும் வரும், மூக்கின் உட்பகுதியில் லேசான வலி தெரியும்.

    பயம்

    பயம்

    வாசனை இழப்பு பற்றி பெரும்பாலானோருக்கு ஒரு பயம் இருக்கு, ஆனால் மிக சீக்கிரமாக குணமாகக் கூடிய விஷயம்தான் அது. எனக்கு மே 4-இல் நுகர்வுத்திறன் போய் 9-ஆம் தேதியில் இருந்து சிறிது சிறிதாக குணமாகி 12-ஆம் தேதியே 80% வாசனைத்திறன் மீண்டது. ஆரம்பத்தில் மூக்கில் சிறிது காரத்தன்மையை நாம் உணரலாம்.

    4 நாட்கள்

    4 நாட்கள்

    வறட்டு இருமல் 4 நாட்களுக்கு தொடர்ந்தது. தொடர்ச்சியாக ஆவி பிடித்தல் மேற்கொள்ளும்போது நெஞ்சில் கட்டியிருக்கும் சளி இலகுவாகி வெளிவர உதவும். பிறகு சளியுடன்கூடிய இருமலும் வரும். நெஞ்சில் அதிகமாக சளி சேரவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும் கொரோனா நுரையீரலை பெரிதாக பாதிக்காமல் செய்துவிடலாம்.

    சாப்பாடு

    சாப்பாடு

    வெந்நீர் அடிக்கடி குடியுங்க. சாப்பாடு பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாடும் இல்லை ஆனால் பாதிப்பு வந்த முதல் 4 நாட்களுக்கு அசைவம், எண்ணெய்யில் செய்த உணவுகள் பண்டங்களை தவிருங்கள். protein, acidic intake தினமும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    வீட்டு தனிமைப்படுத்துதல்

    வீட்டு தனிமைப்படுத்துதல்

    home quarantine நாட்கள் 14. சிலருக்கு 10 நாட்களுக்குள்ளே சரியாகிவிடும். எனக்கு 11வது நாளில் இருந்து எந்த அறிகுறியும் தென்படலை. rapid test kitல் பரிசோதித்தபோது நெகட்டிவ் என்று காட்டியது, RT-PCRல் பரிசோதனை செய்தபோது அதிலும் நெகட்டிவ் வந்தது. எனக்கு நோய்த்தீவிரம் இருந்தது 11 நாட்கள.

    ஆக்ஸிஜன்

    ஆக்ஸிஜன்

    home quarantineல் இருப்பவர்கள் oximeter கொண்டு oxygen அளவை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணியுங்கள். பெரும்பாலும் வைரஸ் தொற்று மூக்கு, தொண்டையைத்தாண்டி நுரையீரலுக்குள் சென்றால் மட்டுமே மூச்சுத்திணறல் ஏற்படும். அதனால் சளி, காய்ச்சல் போன்றவற்றை தீவிரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    செஸ்ட் எக்ஸ் ரே

    செஸ்ட் எக்ஸ் ரே

    ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனையின்போது (4 நாட்களுக்குள்) சிடி ஸ்கேன் எடுக்காமல் chest xray, பிளட் டெஸ்ட் எடுப்பது நலம். ஆரம்பத்திலே சிடி ஸ்கேன் எடுத்து பிரயோஜனம் இல்லை. நோய்த்தீவிரமாகும் நேரத்தில்தான் அது பயன்படும். Chest xray வைத்தும் நுரையீரல் பாதிப்பை அறிய முடியும்.

    சத்தான சாப்பாடு

    சத்தான சாப்பாடு

    இறுதியாக சொல்ல விரும்புவது கொரோனா தொற்று ஏற்பட்டால் மன தைரியத்தோடு இருங்கள். முதல் வாரம் தீவிர அறிகுறிகளிடம் இருந்து விடுபட்டால் நோய் பாதிப்பில் இருந்து சுலபத்தில் மீண்டு விடலாம். மருத்துவர்களின் ஆலோசனை, சத்தான சாப்பாடு, தெளிவான சிந்தனைகள் போன்றவை எளிதில் குணமடைய உதவும்.

    தடுப்பூசி போடுங்க

    தடுப்பூசி போடுங்க

    இன்னொரு முக்கியமான விஷயம்.. தயவுசெஞ்சு யோசிக்காம தடுப்பூசி போட்டுக்கோங்க.. என் வீட்டுல நான் மட்டும்தான் below 30 மற்ற மூன்று பேருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒவ்வொருவரையும் தாஜா பண்ணி ஏப்ரலுக்கு முன்னாடியே போட வைத்ததன் விளைவு யாருக்கும் இப்போவரைக்கும் கொரோனா வரல என நீண்ட பதிவை போட்டுள்ளார்.

    கொரோனா

    கொரோனா

    நாமும் இதே போல் மன தைரியத்துடன் போராடி கொரோனாவை வெல்லலாம். இளமாறனை போல் நாமும் எடுத்துக்காட்டாக இருக்கலாம். எனவே கொரோனாவை கண்டு அஞ்சாதீர்கள், எளிதில் விரட்டக் கூடிய வைரஸே என்பது மனதில் கொள்ளுங்கள். அதே நேரம் அலட்சியம் வேண்டாம்!

    English summary
    Ilamaran explains his experience, how to tackle if we are affected with Corona?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X