சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி!

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: இளையராஜா 75 இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு எதிரான வலக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Ilayaraja 75 function will go as scheduled says Actor Vishal after MHC verdict

இதனால் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் இந்த விழா இதனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

விஷால் தனது பேட்டியில், சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தீர்ப்பு எங்களுக்கும் சாதகமாக வரும் என்று தெரியும். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இளையராஜா 75 நிகழ்ச்சி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும். நிகழ்ச்சி திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி நடைபெறும். இந்த விழா இரண்டு நாட்கள் நடைபெறும்.

நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் தொடங்கி வைக்கிறார். இரண்டாம் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்தியா சினிமா துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மாலை 6 மணி முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். விழாவை பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் இந்த விழாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று, விஷால் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

English summary
Ilayaraja 75 function will go as scheduled says Actor Vishal after Madras High Court verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X