சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Ilayaraja 75: There isnt any reason to put stay for the function says MHC

இதனால் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் இந்த விழா இதனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் இது தொடர்பாக வழக்கு தொடுத்து இருந்தார்.

இதில்தான் தற்போது நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் நீதிபதி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இந்த விழாவிற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 இளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி இளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

அதில், இளையராஜா இசை விழாவுக்குத் தடை விதிக்க முடியாது. இதற்கான காரணங்களை மனுதாரர் தரப்பு அளிக்கவே இல்லை. உரிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இளையராஜா இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் நடத்த தடையில்லை. எந்த ஆதாரமும் இந்த வழக்கில் சமர்பிக்கப்படவில்லை. இந்த விழாவிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது போலவே தெரிகிறது.

தயாரிப்பாளர் சங்கம் அளித்த பதில்கள் ஏற்க கூடியதாகவே இருக்கிறது. அதனால் இந்த விழாவை தயாரிப்பாளர் சங்கம் தாராளமாக நடத்தலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

English summary
Ilayaraja 75: There isn't any reason to put stay for the function says MHC on Producers council's Ilayaraja function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X