• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"மீசை சேகர்".. பிடிக்கபோன எஸ்ஐ.. சட்டையை கிழித்த காஞ்சனா, நந்தினி, சசிகலா, பிரியங்கா.. அலறிய ஓட்டேரி

Google Oneindia Tamil News

சென்னை: திருட்டுத்தனமாக மது விற்றுள்ளார் மீசை சேகர்.. இவரை சஜீபா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்றார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சனா, நந்தினி, சசிகலா, பிரியங்கா போன்ற அந்த பகுதி பெண்கள் திரண்டு, பெண் போலீஸை சரமாரியாக அடித்து, போலீஸ் டிரஸ்ஸையும் கிழித்துவிட்டனர்..!

  சரக்கு விற்போம்... போலீசாரை மடக்கி மடக்கி அடித்த பெண்கள்!

  தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன.. அந்த வகையில் டாஸ்மாக்கும் மூடப்பட்டுள்ளது.. அதிகமான வருமானம் அரசுக்கு வரும் என்று தெரிந்தும், மக்கள் நலன் கருதி, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

   ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

  ஆனால், லாக்டவுன் போடப்போகிறார்கள் என்றதுமே, ஒருசிலர் தேவையான சரக்குகளை, முன்கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்து கொண்டனர்.. இவைகளை பல பகுதிகளில் போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டும் வருகின்றன.

   மது விற்பனை

  மது விற்பனை

  இவர்களை பற்றின தகவல் தெரிந்தால், போலீசாரும் அதிரடியாக சென்று அவர்களை கைது செய்தும் வருகிறார்கள்.. அப்படித்தான் சென்னை ஓட்டேரி எஸ்எஸ் புரம் பகுதியில் மதுபானங்களை திருட்டுத்தனமாக ஒரு குரூப் விற்று வந்துள்ளது.. கள்ளத்தனமாக மது விற்பதாகவும், மது வாங்க சென்ற சரவணபெருமாள் என்பவரிடம் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு, மதுபானம் தராமல் அடித்து துரத்தியதாகவும் போலீசுக்கு புகார் வந்தது.

   அடாவடி

  அடாவடி

  இதையடுத்து ஓட்டேரி ஸ்டேஷனில் டியூட்டியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபாவும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனும், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.. அப்போதுதான் மீசை சேகர் என்பவரை மடக்கி பிடித்தார் சஜிபா.. இந்த மீசை சேகர் தான், அந்த பகுதியில் மதுவை திருட்டுத்தனமாக விற்று, காசை பிடிங்கி அடாவடி செய்பவர்.

   ஆத்திரம்

  ஆத்திரம்

  மீசை சேகரை பிடித்ததுடன், அவரது வீட்டுக்குள்ளும் சென்று மதுபாட்டில்கள் இருக்கிறதா என்று சோதனை நடத்தினார் சஜீபா.. ஆனால் அவரை பிடித்துவிட்ட ஆத்திரத்தில், அங்கிருந்த ஆண்களும், பெண்களும் சப்இன்ஸ்பெக்டர் சஜீபாவை சரமாரியாக தாக்கினர்.. அவரது போலீஸ் டிரஸ்ஸை கிழித்து கை, கால்களில் காயங்களை ஏற்படுத்தினர்.

   மணிவண்ணன்

  மணிவண்ணன்

  இதனால் நிலைகுலைந்த சஜீபா உதவிக்கு மணிவண்ணன் உட்பட சக போலீசாரை அழைத்தார்.. அனைவரும் சேர்ந்து மீசை சேகரை ஜீப்பில் ஏற்ற முயன்றனர்.. ஆனால் அதற்குள், அங்கிருந்த கும்பல், போலீஸ் வாகனத்தை வழிமறித்து சாவியையும் பிடுங்கிகொண்டது.. மணிவண்ணனையும் சேர்த்து தாக்கியது.. சஜீபாவிடம் இருந்து லத்தியையும் பறித்து கொண்டு தகராறில் ஈடுபட்டது.

  விற்பனை

  விற்பனை

  இதில், காஞ்சனா, நந்தினி, சசிகலா, பிரியங்கா போன்ற பெண்களும் அடக்கம்.. இவர்களும் மதுபான விற்பனையில் மீசை சேகருடன், பங்கெடுத்து கொள்பவர்களாம். அதற்குள், பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரிக்கு தெரியவந்ததையடுத்து, அதிகாரிகளுடன் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டார்.. ஆனால் அந்த கும்பல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது..

   படுகாயம்

  படுகாயம்

  இறுதியில் வலைவீசி தேடி, அவர்களுள் மொத்தம் 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளது போலீஸ்.. தலைமறைவாகி உள்ள மீதி 3 பேரை தேடி வருகிறார்கள். இந்த தாக்குதலில் சஜிபாவும், மணிவண்ணன், சங்கர் என்ற போலீஸ் என அனைவருமே படுகாயமடைந்துள்ளனர்.. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

  English summary
  Illegal sale of Aalcohol attack on police and 8 arrested in Chennai
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X