சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்

பட்டினியால் மெலிந்து கிடக்கும் சிங்கங்களின் போட்டோக்கள் வைரலாகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    உடல் மெலிந்து மோசமான நிலையில் காணப்படும் சிங்கம் | African lions from Sudan zoo images go viral

    சென்னை: முரட்டு விலங்கு.. காட்டு ராஜா.. கம்பீர நடை.. கர்ஜனை குரல் என பல அம்சங்களுக்கு சொந்தமானதுதான் சிங்கம்... இப்படித்தான் நாம் இதுவரை பார்த்தும், கேட்டும் வந்திருக்கிறோம்.. ஆனால், எலும்பும் தோலுமாக சிங்கங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பார்த்ததும் இணையவாசிகள் கொந்தளித்து கிடக்கின்றனர்.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றுதான் சூடான்.. இப்போது அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்வேறு அரசு தரப்புகளுக்கும் உரிய நிதியினை ஒதுக்க முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. அதனால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகரான கார்டூம் என்ற பகுதியில் ஆல்-குரேஷி என்ற வன உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்கள் உள்ளன.. இந்த சிங்கங்களுக்கும் சாப்பாடு இல்லை.. உணவுப் பற்றாக்குறையால், எலும்பும் தோலுமாகக் இந்த சிங்கங்கள் காட்சி அளிக்கின்றன!!

    ஊடல் மெலிவு

    ஊடல் மெலிவு

    போட்டோக்களில் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது... உண்மையிலேயே அவை சிங்கம் போலவே தெரியவில்லை.. மிகவும் மெலிந்து கிடக்கின்றன.. உடல்கள் ஒட்டி உள்ளன.. எலும்புகள் வெளியே தெரிகின்றன... இதுவரை கொழு கொழு சிங்கத்தை பார்த்த நமக்கு எலும்பும் தோலுமாக உள்ள சிங்கங்களை பார்க்கவே வருத்தமாக உள்ளது.

    ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    இதில் அதிர்ச்சி என்னவென்றால்.. கிட்டத்தட்ட மரணத்தை அந்த சிங்கங்கள் எட்டிவிட்டது போலவே தெரிகிறது.. உயிர் பிரியும் முன்பு எப்படி இருக்குமோ அந்த நிலைக்கு அந்த சிங்கங்கள் ஆளாகி உள்ளன.. நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அந்த சிங்கங்களுக்கு உடனடியாக உதவக் கோரி, #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்குடன் சிங்கங்களின் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

    கம்பீரம்

    கம்பீரம்

    சிங்கங்களின் இந்த நிலை குறித்து பூங்கா ஊழியர்கள் சொல்லும்போது, "சிங்கங்களுக்கு சரியான, தேவையான உணவு இல்லை. இதனால் மூன்றில் 2 பங்கு உடல் எடையை சிங்கங்கள் இழந்துள்ளன. சிங்கங்களை கம்பீரமாக கண்டவர்கள், இங்குள்ள சிங்கங்களை பார்த்தவுடன் ஷாக் ஆகிறார்கள்.. முடிந்தவரை எங்கள் சொந்த செலவில்தான் அவற்றை பராமரித்து வருகிறோம்" என்றனர்.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    விஷயம் தெரிந்து ஒரு சிலர் பூங்காவுக்கு சென்றனர்.. அங்கு சிங்கங்களை நேரில் பார்த்துவிட்டு, பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என்ற கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.. பெரும்பாலானோர் சிங்கத்தை போட்டோவில் பார்த்துவிட்டு, கொந்தளிப்பு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    shocking images of starving lions in sudan zoo spark and hashtag tending #SudanAnimalRescue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X