சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்- வானிலை மையம் தகவல்

    மேலும் அரபிக்கடல் பகுதியில்காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யும்.

    வறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்வறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்

    4 மாவட்டங்களில் கனமழை

    4 மாவட்டங்களில் கனமழை

    நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
    மதுரை, திருச்சிரப்பள்ளி, கருர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

    மழை விவரம்

    மழை விவரம்

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கலில் (தர்மபுரி) 7 செமீ மழையும், ஊத்துக்குளியில் (திருப்பூர்) 6 செமீ மழையும், பாப்பி ரெட்டிபட்டி (தர்மபுரி) மற்றும் திருத்துறைப்பூண்டியில் (திருவாரூர்) 4 செமீ மழையும் இன்று காலை நிலவரப்படி பதிவாகி உள்ளது.

    எங்கு போக கூடாது

    எங்கு போக கூடாது

    மன்னர் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், வடக்கு வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்- எனவும் அங்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தென்கிழக்கு அரபிக்கடல்

    தென்கிழக்கு அரபிக்கடல்

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

    மேகமூட்டமாக இருக்கும்

    மேகமூட்டமாக இருக்கும்

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும். தென்மேற்கு வங்கக்கடல், மேற்கு மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல், தென்கிக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் நாளை முதல் மற்றும் ஜுன் 1ம் தேதி வரை பலத்த காற்று வீசும். மணிக்கு 50முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு அடுத்த 5நாட்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai IMD said that heavy rain may lashed over Nilgiris, Salem, Dharmapuri, Krishnagiri, Erode district of tamilnadu. fishermens do not go to Southwest Bengal, West Central Arabian Sea, Northeast Arabian Seas in next 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X