சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிசார்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கடந்த நிலையில் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அந்த புயலால் எந்த மழையும் பெய்யவில்லை.

IMD Chennai weather forecast : heavy rain may lashed over Western Ghats districs of tamil nadu

அதேநேரம் வெப்பச்சலனத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

IMD Chennai weather forecast : heavy rain may lashed over Western Ghats districs of tamil nadu

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 9 செமீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 8 செமீ மழையும், பெருஞ்சாணி மற்றும் புத்தன் அணைக்கட்டில் தலா 6 செமீ மழையும் பேச்சிப்பாறை(கன்னியாகுமரி) , சிவலோகம் (கன்னியாகுமரி), நாவலூர் (திருச்சி) தலா 5 செமீ மழையும் பெய்திருந்தது.

நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் நிசார்கா

    English summary
    weather forecast : heavy rain may lashed over Western Ghats districts and Tirunelveli, Kanyakumari districts of tamil nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X