சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் வெளுக்க போகுது மழை.. 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்- வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மதுரை, தேனி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, சிவகங்ககை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் கத்தரி வெயில் நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது,

    ஜூன் 5 கிடையாது.. ஜூன் 1ம் தேதியே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. IMD சூப்பர் அறிவிப்புஜூன் 5 கிடையாது.. ஜூன் 1ம் தேதியே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. IMD சூப்பர் அறிவிப்பு

    பலத்த மழை

    பலத்த மழை

    வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கனமழைக்கு வாய்ப்பு

    கனமழைக்கு வாய்ப்பு

    குறிப்பாக நீலகிரி, தர்மபுரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வேலூரில் அதிகம்

    வேலூரில் அதிகம்

    வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை இடையப்பட்டியில் 11 செமீ மழை பெய்திருந்தது. மதுரை திருமங்கலம், பேரையூர் ஆகிய பகுதிகளில் 8 செமீ மழை பெய்திருந்தது. புதுக்கோட்டை, தஞ்சையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது,

    விருதுநகரில் மழை

    விருதுநகரில் மழை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரை விமான நிலையம், ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் பவானி, தேனி மாவட்டம் உத்தமபாளையம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இதுதவிர திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் வரும் ஜூன் 4ம் தேதி வரை மீன்படிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    IMD Chennai told that heavy rain may lashed over Nilgiris, Dharmapuri, Coimbatore, Tenkasi, Kanyakumari, Erode, Krishnagiri, nellai district of tamilandu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X