சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Nivar: மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலின் பெயர் நிவர்.. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலுக்கு நிவர் என இந்திய வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

Recommended Video

    Cyclone Nivar: அடுத்து நிவர் புயல்.. மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்

    சென்னை மாமல்லபுரம் அருகே நேற்று குறைந்த தாழ்வு நிலை உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் அது பயணிக்கும் பாதை குறித்து கணிக்கப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடதமிழகம், ஆந்திரம் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்வதை வானிலை மைய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம் நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம்

    கனமழை

    கனமழை

    இதனால் புயலானது நிச்சயம் உருவாகி நவம்பர் 25-ஆம் தேதி சென்னை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும். இந்த புயலால் கடலோர மாவட்டங்களுக்கு அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதீத மழை

    அதீத மழை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழை பெய்யும். நாளை முதலே தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலையில் இந்த புயலுக்கு நிவர் என இந்திய வானிலை மையம் பெயரிடப்பட்டுள்ளது.

    அடுத்த பெயர் என்ன

    அடுத்த பெயர் என்ன

    இது போல் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்திய பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என பெயரிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவர்.

    நிவருக்கு அர்த்தம் என்ன

    நிவருக்கு அர்த்தம் என்ன

    நிவர் என்றால் தடுப்பு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு என அர்த்தம் வருகிறது. பெயருக்கேற்ப இந்த நிவர் சைலண்ட்டாக வந்த வழியே தெரியாமல் போய்விடுமா இல்லை வைலண்ட்டாக நடந்து கொள்ளுமா என்பது காற்றின் வேகத்தை பொருத்தே தெரியவரும்.

    English summary
    Indian Meteorological Department says that they named the cyclone which formed in Bay of Bengal as Nivar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X