சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சிடோய்.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    அப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிருச்சு டோய் ! TamilNaduWeather update

    சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது.

    இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு வங்கம் பக்கமாக திரும்பிவிட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட நாட்களாக நல்ல மழையில்லை. அவ்வப்போது தமிழகத்தின் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.

    லேட்டாக வந்தாலும்.. சும்மா கிழி.. சென்னையை உலுக்கிய ஓவர்நைட் மழை... ! #chennairains லேட்டாக வந்தாலும்.. சும்மா கிழி.. சென்னையை உலுக்கிய ஓவர்நைட் மழை... ! #chennairains

    சுற்றுப்புற பகுதி

    சுற்றுப்புற பகுதி

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் முடியும் நிலையில் இந்த ஆண்டும் மழை பொய்த்து போய்விடுமோ என மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இதையடுத்து யாரும் எதிர்பாராத வேளையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

    வெளுத்தெடுத்த மழை

    வெளுத்தெடுத்த மழை

    விடிய விடிய பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் சாலைகளிலும் தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    டிசம்பர் 1 வரை மழை

    டிசம்பர் 1 வரை மழை

    இந்த நிலையில் இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் காட்டியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய தொடங்கிவிட்டது. வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும்.

    நவம்பர் 30

    நவம்பர் 30

    ஒரு வாரத்திற்கு தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்வதற்கு சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் மழைக்கு நல்ல மழை பெய்யும். அது போல் மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 30 முதல் மழை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

    English summary
    IMD says that as North East monsoon intensifies, Tamilnadu will get rain for one week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X