சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மாலை 5.30 மணி வரை 9.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மிக அருகே மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

IMD says that Heavy rainfall recorded in Chennai

நேற்று இரவு முதல் சென்னையில் விட்டுவிட்டு திடீரென கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் வானிலை பதிவு செய்யப்படும் இடங்களான நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் மழையின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாகத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை 9.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அது போல் மீனம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை 8.6. செ.மீ. மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

English summary
IMD announces how much rainfall recorded in Nungambakkam and Meenambakkam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X