சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் மழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் கட்டாகி உள்ளது. பழுதான மின்மாற்றிகளை மாற்றி மின்சாரத்தை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் கொட்டும் மழையில் மின் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Recommended Video

    புயுல், மழையிலும் கடமை தவறாது பணி செய்யும் EB ஊழியர்கள் - வீடியோ

    சென்னையில் கனமழையால் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்வாரியத்தினரை காய்ச்சி ஊற்றுவது நம் மக்களின் இயல்பாக உள்ளது.

    impact of Nivar storm Electrical workers are working in the pouring rain to replace the faulty transformers

    ஆனால் பழுது காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னையில் பல இடங்களில் மரம் விழுந்ததை போல் மின்கம்பங்கள் விழுந்து பழுதாகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் கிருஷ்ணா நகர் 1வது மெயின் ரோட்டில் கனமழைக்கு நடுவே ஏடி வெங்கசேடன் மற்றும் ஏஇ பிரேமா ஆகியோர் மேற்பார்வையில் திருமலை மற்றும் சேகர் எல்லை ஆகிய இரண்டு பேர் அந்த பகுதியில் மின்கம்பங்களில் ஏற்பட்ட பழுதை நீக்க பணியாற்றி வருகிறார்கள்

    இவர்கள் அந்த பகுதி முழுவதும் மின்சாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குகொணடுவர உழைத்து வருகிறார்கள். இவர்களை போல் சென்னை முழுவதும் பலர் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைத்துவருகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் பொறுமை காக்க வேண்டும். புயலின் போதும், புயலுக்கு பின்பும் சென்னையை ஒளிர வைக்க பணியாற்ற போகிறார்கள்.

    English summary
    Electricity has been cut off in many places in Chennai due to the impact of Nivar storm. Electrical workers are working in the pouring rain to replace the faulty transformers and distribute the electricity to the people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X