சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.. ஆனால் பாதுகாப்பு இருந்தால்தான் பெண்களுக்கு நைட் டூட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ

    சென்னை: தொழில் வளர்ச்சி மற்றும் வேளைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியாகி உள்ளது.

    வரும் ஜுலை 1ம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின் படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். இந்த அரசாணை அடுத்த மாதம் (ஜூலை,2019) தொடங்கி 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    important points of Tamil Nadu GOVT GO over allowed to Shops can function in for 24 hours in 365 days

    தமிழக அரசின் இந்த அரசாணையில் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ககலாம்

    • ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும். அத்துடன் 'பார்ம் எஸ்' மூலம் ஒவ்வொரு பணியாளரின் தகவல்களை பெற வேண்டும்.
    • ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள். யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.
    • தொழிலாளர் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும்.
    • அதன்பின்னரும் பணியளாரை வேலையில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் பணியாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறவேண்டும்.
    • பெண்களை இரவு 8 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்..
    • அதேபோல் விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.
    • ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் மெயின் நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.
    • பணியாளர்களுக்கு ரெஸ்ட் ரூம், வாஸ் ரூம். பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
    • பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.
    • எல்லாவற்றையும் விட கடைசியாக கடை மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை உறுதியாக நீங்கள் இருந்தால், 24 மணிநேரமும் கடைய திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.அவர்கள் கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் கடையை நிறுவனத்தை திறக்க அனுமதிப்பார்கள்.

    English summary
    Tamil Nadu GOVT allowed to Shops can function in for 24 hours in 365 days , important points of GO
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X