தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை! "டிரிப்" போன பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்.. விக்கித்த எக்ஸ்பர்ட்ஸ்
சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம்..கடந்த ஜூன் மாதத்தில் நடந்து உள்ளது. சுற்றுசுழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது?
பொதுவாக மே மாதத்தில் தமிழ்நாட்டில் பாலூட்டி உயிரினங்கள் இடமாற்றம் அடைவது வழக்கம். அதேபோல் பறவை இனங்களில் சில வகையும், பூச்சி இனங்களில் சில வகையும் இடமாற்றம் அடையும்.
பட்டாம்பூச்சிகளிலும் கூட டார்க் ப்ளூ டைகர், ப்ளூ டைகர், காமன் க்ரோ வகை பட்டாம் பூச்சிகள் இடமாற்றம் அடைவது வழக்கம்.
"நீங்கதான் என்னோட கடைசி நம்பிக்கை!" கண்ணீர்விட்ட இளம் பெண்.. பதறிய போலீஸ்! கடைசியில் குபீர் ட்விஸ்ட்

பட்டாம்பூச்சிகள்
மேற்கு தொடர்பு மலையிலும், கிழக்கு தொடர்ச்சி மலையிலும் இருக்கும் பட்டாம்பூச்சிகள் இப்படி இடமாற்றம் அடைவது வழக்கம். ஆனால் பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடையாது. இந்த லைம் பட்டாம்பூச்சிகள் என்பது எலுமிச்சை வண்ணத்தை கொண்டு இருக்கும். வெளிப்புறத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும். உள்ளே செல்ல செல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இடமாற்றம்
இவை பொதுவாக மேற்கு தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்தாலும் இடமாற்றம் அடையும் குணம் கொண்டது கிடையாது. அப்படியே இடமாற்றம் அடைந்தாலும் ஒரு பகுதியில் இருந்து அருகிலேயே இருக்கும் இன்னொரு பகுதிக்கு மொத்தமாக கூட்டமாக பறந்து செல்லும். அதுவும் கூட பல வருட இடைவெளியில்தான் நடக்கும்.

மே மாதத்தில்
அப்படியே இடம் மாற்றினாலும் மே மாதத்தில்தான் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடையும். கடந்த 2018ம் ஆண்டில் பவானி, மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு நிமிடத்திற்கு 200 என்று ஆயிரக்கணக்கில் ஒரே நாளில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்தன. அதன்பின் லைம் பட்டாம்பூச்சிகள் எங்கும் இடமாற்றம் அடையவில்லை. ஆனால் இந்த முறை ஜூன் மாதத்தில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன.

லைம் பட்டாம்பூச்சிகள்
இதுவரை தமிழ்நாட்டில் லைம் பட்டாம்பூச்சிகள் ஜூன் மாதத்தில் இடமாற்றம் அடைந்ததே இல்லை. கடந்த ஜூன் 9-14 மற்றும் ஜூன் 17-19 ஆகிய தேதிகளில் லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த இடமாற்றம் அதிகம் நடந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 10 லைம் பட்டாம்பூச்சிகள் வீதம் இடமாற்றம் அடைந்துள்ளன. இதன் மூலம் ஒரு நாளுக்கு 14 ஆயிரத்திற்கும் அதிகமான லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன.

வியப்பு
தமிழ்நாட்டில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு என்று சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் டூ ஜூன் மாதத்தில் திடீரென தமிழ்நாட்டில் எதிர்பார்க்காமல் பெய்த மழையே இந்த லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் லைம் பட்டாம்பூச்சிகள் இப்படி அதிகமாக இடமாற்றம் அடைந்துள்ளன.

திருப்பூரில் அதிகம்
அதிலும் திருப்பூரில்தான் அதிகமாக லைம் பட்டாம்பூச்சிகள் இடமாற்றம் அடைந்துள்ளன. இங்கு நிமிடத்திற்கு 25 லைம் பட்டாம்பூச்சிகள் வரை இடமாற்றம் அடைந்துள்ளன. வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. எதிர்பார்க்காத மழை இதற்கு காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் வேறு ஏதாவது வானிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுசூழல் வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள்.