சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வண்டியை ஓரங்கட்டுங்க.. போட்டோ எடுங்க இவரை.. ஏன் ஹெல்மட் போடல?".. அதிர வைத்த இணை கமிஷனர்

ஹெல்மட் அணியாமல் வந்த சப்-இன்ஸ்பெக்டரை உயரதிகாரி கண்டித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏன் ஹெல்மட் போடல?'.. அதிர வைத்த இணை கமிஷனர்

    சென்னை: "யோவ்... வண்டியை ஓரங்கட்டுய்யா.. போட்டோ எடுங்க இவரை? ஏன் ஹெமட் போடல?" என்று சென்னை பீச் ரோட்டின் சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் வழக்கமான, கேட்டுப்பழகின வார்த்தைகள்தான் என்று நினைத்தனர்... ஆனால் சம்பந்தப்பட்டவர்களை பார்த்ததும்தான், ஆச்சரியமாக பார்த்து கொண்டே சென்றனர்!

    அடிக்கடி ஒரு அறிவிப்பு வரும்.. அடிக்கடி காணாமலும் போகும்.. பிறகு திடீரென கண்டிப்பான அறிவிப்பாக வெளியாகும் என்றால் அது ஹெல்மட் விவகாரம்தான்!

    இப்போது கோர்ட் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. யாரெல்லாம் ஹெல்மட் போடலையோ, அவங்களின் வண்டியை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று ஒரு கேள்விகவும்தான் நிலைமை சீரியஸ் ஆனது.

    சென்னையில் ரவுடி என்கவுன்டர்.. போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டுக்கொலை! சென்னையில் ரவுடி என்கவுன்டர்.. போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டுக்கொலை!

    போட்டடோ எடுங்க

    போட்டடோ எடுங்க

    அதனால் கண்கொத்தி பாம்பாக நோட்டமிடுபவர்களாக மாறி உள்ளனர் டிராஃபிக் போலீஸார். இதற்கு காரணம் கமிஷனர் விஸ்வநாதனின் அதிரடிதான். "ஹெல்மட் போடலையா.. அப்படின்னா, இ-சலான் வழியாக ஃபைன் கண்டிப்பா போட்டுடுங்க" என்ற உத்தரவு போட்டுவிட்டார். அதனால் ஒருத்தர்கூட ஹெல்மட் இல்லாமல் சென்னையில் பார்க்க முடிவதில்லை.

    இணை கமிஷனர்

    இணை கமிஷனர்

    இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால், நேத்து பீச் ரோட்டில் வழக்கமான சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்துக்கு திடீரென்று ஆய்வுக்காக இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அவருடம் மற்ற போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர்

    சப்-இன்ஸ்பெக்டர்

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பைக்கில் வந்தார். ஆனால் ஹெல்மட் போடவில்லை. இதை பார்த்ததும் இணை கமிஷனர் டென்ஷ்ன் ஆகிவிட்டார். "வண்டியை நிறுத்து.. ஏன் ஹெல்மட் போடலை? பைக்கை அப்படி ஓரமா நிறுத்து. இப்படி பொறுப்பில இருக்கிறவங்களே ஹெல்மட் போடலைன்னா, பப்ளிக் எப்படி நம்மை மதிப்பாங்க, இவரை போட்டோ எடுங்க முதல்ல?" என்று காய்ச்சி எடுத்தார். இதை அங்கிருந்த பொதுமக்கள், பஸ், கார்களில் போய் கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து திகைத்தனர்.

    மக்கள் வியப்பு

    மக்கள் வியப்பு

    இணை கமிஷனர் இங்கே வந்து நின்று கொண்டிருப்பார் என்றும், இப்படி எல்லார் முன்னாடியும் கேட்டுவிடுவார் என்றும் அந்த சப் இன்ஸ்பெக்டர் நினைக்கவே இல்லை. அதனால் சீனியர் ஆபீசருக்கு மரியாதை கொடுத்துவிட்டு உடனடியாக வண்டியை ஓரங்கட்டினார். கண்டிப்பான நடவடிக்கை, வார்த்தைகளுடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த இணை கமிஷனரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே சென்றனர்.

    English summary
    Chennai Joint Commissioner Radhakrishanan, busts Sub Inspector for not wearing helmet while driving in Beach Road
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X