சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது?.. பதற வைக்கும் தலைநகரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ

    சென்னை: ஒரே நாளில் 5 கொலைகளை கண்டு சென்னைவாசிகள் நடுங்கி கிடக்கிறார்கள்.

    ஓட்டேரி பகுதியில் 15 நாளைக்கு முன்பு ஜெயிலுக்குபோய் திரும்பி வந்தவர்தான் குமரன் என்ற 22 வயது இளைஞர். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடிக்கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட தகராறால் சக நண்பர்கள் அரிவாளால் வெட்டியே அவரை சாய்த்தனர்.

    அதேபோல, ஆவடியில் ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை சொந்த குடும்பத்தினரே கட்டை, கடப்பாரை வைத்து தாக்கி கொன்றனர். அவர்கள் வீட்டு மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துவிட்டார்களாம். இதுதான் பிரச்சனை. இதற்கு ஒருகொலை.

    யார் காரணம்?

    யார் காரணம்?

    அதேபோல, அண்ணாநகரை சேர்ந்த ஏசுராஜன் என்ற 70 நபரை, அவரது மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம், யார் காரணம் என இனிமேல்தான் உண்மைகள் தெரியவரும்.

    வைஷ்ணவா காலேஜ்

    வைஷ்ணவா காலேஜ்

    மதியம் 12 மணிக்கு வைஷ்ணவா காலேஜில் அருகில் நடந்து கொண்டிருந்த சூளைமேடு ரவுடி குமரேசனை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. பொதுமக்களே இதை பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.

    பெண்ணின் உடல்

    பெண்ணின் உடல்

    அதேபோல, பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு கிடப்பதை போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள்.

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    இவ்வளவும் ஒரேநாளில் நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த கொலைகளுக்கான காரணங்களையும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் பிடித்து ஜெயிலில் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், இது ஏற்றுக் கொள்ள கூடியதா? தலைநகரமான சென்னையில் இது நடக்கலாமா?

    கொலைநகரம்

    கொலைநகரம்

    நகரெங்கும் போலீசார்களும், சிசிடிவி காமிராக்கள் என வைத்தும் என்ன பிரயோஜனம்? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? ஒரே நாளில் இத்தனை கொலைகள் என்பது சென்னைவாசிகளுக்கு நடுக்கத்தைதான் தருவதுடன் தலைநகரம் இனியும் கொலைநகரமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களின் உடனடி கோரிக்கையாக எழுந்துள்ளது.

    English summary
    There are 5 people killed in Chennai in a single day. Because of these murder, the public is in fear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X