2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்!
சென்னை: ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி இரு விஷயங்களை நன்கு தெளிவுப்படுத்திவிட்டது.
ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் முன் அறிவித்தார். அவ்வாறு அறிவித்து இரு ஆண்டுகளாகியும் அவர் கட்சியை தொடங்கவில்லை. எல்லாமே ரெடி இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி என்ற ரஜினி இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன் என்பது தெரியவில்லை.
இதனால் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ரஜினி கட்சித் தொடங்காதது குறித்து அரசியல்வாதிகள் பல கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்!

கனவில்
ஆனால் அண்மைகாலமாக ரஜினி தனது தொடர் பேட்டிகளின் மூலம் அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைக்கிறார். கமலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, முதல்வர் எடப்பாடி முதல்வராவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் ஒரு அதிசயம் நடந்தது.

கமலுடன் இணைந்து
அதுபோல் ஆட்சி கவிழும் என்றார்கள், அப்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அற்புதம் நிகழ்ந்தது. எனவே அதிசயம் நேற்றும் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்தது. நாளையும் நிகழும் என்றார். அது போல் கோவா செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழக நலனுக்காக தேவையேற்பட்டால் கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சி
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ரஜினி. அதில் அவரிடம் திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

கட்சி உறுதி
அதற்கு ரஜினி 2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினி தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலம் இரு விஷயங்கள் தெளிப்படுகின்றன. அதாவது ரஜினி 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சித் தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள்
இரண்டாவது விஷயம், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை மிக தெளிவாக புரிந்து வைத்து கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரஜினியின் பேட்டி அவரது தன்னம்பிக்கையையும் கட்சி தொடங்குவது என்ற உறுதியையும் காட்டுவதாக ரசிகர்கள் பூரித்து கொள்கின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!