சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது "தல" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு!

தொகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி வருகிறார் எச்.ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: யாராக இருந்தாலும், இதை எல்லாம் செய்றதுக்கு ஒரு தில் வேண்டும்... அது நம்ம எச்.ராஜாவுக்கு நிறையவே இருக்கு.

சிவகங்கை தொகுதிதான் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கினார் எச்.ராஜா! இதனால் நன்றாக ஜெயிக்க வேண்டிய தொகுதி என்று தெரிந்தும் பாஜகவுக்காக விட்டுத் தந்தது அதிமுக!

In Sivagangai, BJP Candidate H Raja distributes Sweets to voters

இங்கு காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எதிர்தரப்பில் போட்டியிட்டார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், களப்பணியை பாஜக தரப்பு சரியாக செய்யவில்லை என்பதே.

தொகுதியில் இறங்கி வேலை பார்க்க பாஜகவில் யாரும் இல்லை. கூட்டணி கட்சிகளும் சரியான ஒத்துழைப்பை தந்தார்களா என தெரியவில்லை. ஆனால் தாமரை சின்னத்தில் எப்படி ஓட்டு போட வேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களுக்கு டெமோ காட்டி ட்வீட் எல்லாம் போட்டார் எச்.ராஜா!

கடைசியில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார். கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகள் என்றால், எச் ராஜா 2,33,860 வாக்குகளை பெற்றிருந்தார். அதாவது 3 லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசம் இருந்தது.

சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா? சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா?

ஆனாலும் அவர் தனது தோல்வி பற்றி கவலையே படலையே... கை நிறைய ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கி தொகுதி மக்களுக்கு வாய் நிறைய சிரிப்புடன் வழங்கி வருகிறார். இதற்கு என்ன காரணம் என்றால், அகில இந்திய அளவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாம்! அதற்குதான் இந்த ஸ்வீட் எடு கொண்டாடு மேட்டர். இத்துடன் எச்.ராஜா தரப்பில் சரசரவென பட்டாசுகளும் வெடிக்கப்பட்டுள்ளது.

தோற்றுப்போனாலும், இப்படி ஸ்வீட் கொடுத்து அசத்துகிறாரே எச்.ராஜா என்று ஆச்சரியப்பட்டு வாயடைத்து போய் உள்ளனராம் சிவகங்கை தொகுதி மக்கள்!

English summary
H Raja has distributed sweets to Sivagangai for the victory of the BJP at the All India level
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X