சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ்.. பயணிகள் தவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக பல முறை நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் நிலையங்களில், பெயர் பலகைகளில், வங்கி ஏடிஎம்களில் என எல்லா இடங்களிலும், தமிழை புறக்கணித்து இந்தியை மட்டும் தூக்கிப்பிடிப்பதை எதிர்த்தே பல போராட்டங்கள் நடந்து வருகினற்ன.

In Tamil Nadu, a message has been sent in Hindi to those who have booked train tickets

அஞ்சலக வேலை தொடங்கி, அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டி வரையிலும் இந்தி அறிமுகம் செய்யப்பபட்டது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. அரசு அதற்கு விளக்கம் அளிப்பது வாடிக்கையாக உள்ளது.

மும்மொழிக்கொள்கை வடிவில் இந்தியை தமிழகத்திற்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்தியை எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் அதிமுக,திமுகஇரண்டுமே ஒற்றுமையாக உள்ளன.

In Tamil Nadu, a message has been sent in Hindi to those who have booked train tickets

வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யாருக்கெல்லாம் பொருந்தும்? மாத தவணை சலுகை நீட்டிக்கப்படுமா? வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யாருக்கெல்லாம் பொருந்தும்? மாத தவணை சலுகை நீட்டிக்கப்படுமா?

இந்த சூழலில் புதிய சர்ச்சையாக தமிழகத்தில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஆங்கிலத்தில் மெசேஜ் வரும். தமிழில் மெசேஜ்கள் அனுப்பப்படுவது கிடையாது. இதனிடையே இந்தியில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் அளித்தால் வெளியிடப்படும்.

English summary
In Tamil Nadu, a message has been sent in Hindi to those who have booked train tickets, which has caused controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X