சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய்ப்பிரசாரம் முறியடிப்பு.. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடக்கும்.. அர்ஜூன் சம்பத் உறுதி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழகம் சங்கிகளின் பூமி. சங்கம் வளர்த்த பூமி. பொய்பிரசாரம் முறியடிக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடக்கும். இதுதொடர்பாக பொய் பிரசாரம் முறியடிக்கப்படும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் "ஸ்ரீ" ஞானமூர்த்தீஸ்வரர் சமேத "ஸ்ரீ" முத்தாரம்மன் திருக்கோவில் தசரா வெகு விமர்சியாக நடைபெற்றது வருகிறது. அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த காளி, சிவன், முருகன் என பல்வேறு கடவுள் வேஷம் அணிவது வழக்கம்,

தூத்துக்குடியில், காளி ஊர்வலமானது ருத்ர தர்ம சேவா அமைப்பினர் வருடந்தோறும் நடத்துவர். இந்த வருடத்துக்கான ஊர்வலமானது தூத்துக்குடி இசக்கியம்மன் கோவிலில் தொடங்கி சிவன் கோவில் வரை நடைபெற்றது.

 அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்! அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

ஊர்வலத்தை ருத்ர தர்மா நிறுவன தலைவரும், இந்து மக்கள் கட்சியுன் மாநில செயலாளருமான தா.வசந்தகுமார் தலைமையில், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தொடங்கி இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த காளி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் தசரா குழுக்கள் தனது தசரா குழுவில் உள்ள அனைத்து பக்தர்களும் எல்லா வித வேடம் அணிந்து சிறந்த முறையில் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் தசரா குழுக்களில் சிறப்பான 3 குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஊர்வலத்தை தொடங்கி வைத்து இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:

நவராத்திரி கொண்டாட்டம்

நவராத்திரி கொண்டாட்டம்

பாரத நாடு முழுவதும் நவராத்திரி தசரா கொண்டாட்டம் சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சனிக்கிழமை விரதமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களுடைய மாபெரும் திருவிழா இந்த தசரா திருவிழா, தென் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து இந்த தசரா திருவிழாவில் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இன்றைக்கு நம்முடைய நாட்டிற்கு பாதுகாப்பு தேவை, நம்முடைய பாரதம் தேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் நம்முடைய ஆயுதங்களை எல்லாம் தன்னுடைய கையிலே வைத்திருக்கக்கூடிய பாரதத்தாய் மகா காளி, பராசக்தி, நவராத்திரியாகும்.

அவதூறு பரப்புகின்றனர்

அவதூறு பரப்புகின்றனர்

இன்று விஜயதசமி நாளில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நாட்களை கொண்டாடும் விதமாகவும், அக்டோபர் 2 காந்திக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையிலும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையிலும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற இருக்கிறது. மூன்று முறை ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது மூன்று முறையும் யார் தடை செய்தார்களோ அவர்களே அந்த தடையை விலக்கிக் கொண்டார்கள். இது ஒரு சட்டபூர்வமான இயக்கம் ஒரு கட்டுப்பாடான, ஒழுக்கமான, சேவை இயக்கம், எனவே இந்த இயக்கம் குறித்து அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

பொய் பிரசாரத்தை முறியடிப்போம்

பொய் பிரசாரத்தை முறியடிப்போம்

காந்தியை கொன்ற இயக்கம் ஆர்எஸ்எஸ் என காங்கிரஸ் ராகுல் ஊர் ஊராக பேசினார், ராகுல் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். இங்கே திருமாவளவன், கம்யூனிஸ்ட் போன்றோர்கள் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதை முறியடிப்போம். தமிழகம் சங்கிகளின் பூமி, தமிழகம் சங்கம் வளர்த்த பூமி, ஆகவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடைபெரும். இன்னைக்கு காளி ஊர்வலம் நடத்துகின்ற முக்கியமான நோக்கம் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) தடை செய்யப்பட்டது. இது எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி,

சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்

சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்

அதோடு மட்டுமல்ல தேச விரோத, வன்முறை தீவிரவாதம் தடுக்க பட வேண்டும் என்று சொன்னால் தொழில் வளம், வாழ்வாதாரம் பெறுக வேண்டும் என்று சொன்னால் மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், கூடங்குளம் போராட்ட குழு இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. இவர்களும் பல்வேறு மூலமாக தமிழகத்தின் அரசுக்கு எதிராக வளர்ச்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். ஆகவே இதை தடை செய்ய வேண்டும்'' என்றார்.

English summary
Tamil Nadu is the land of Sanghis. The land raised by the association. The RSS march will be peaceful. Hindu People's Party Organization President Arjun Sampath has said that the false propaganda in this regard will be defeated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X