சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டமன்ற தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக... அதிமுக கொடுக்கப்போவது எவ்வளவு..?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதே பாகப்பிரிவினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள்.

Recommended Video

    TN Assembly 2021| அதிமுக கூட்டணியில் பஜகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்?

    திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் இந்த முறை அதிக எண்ணிக்கையில் சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றன.

    ஆனால் திமுக, அதிமுகவோ தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான சீட் வரைமுறையை எப்போதோ நிர்ணயம் செய்து அதை வெளிக்காட்டி கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது.

    கொரோனா மரணம் - மத்திய அரசின் விதிகளில் சமரசம் செய்யாதீங்க - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவுகொரோனா மரணம் - மத்திய அரசின் விதிகளில் சமரசம் செய்யாதீங்க - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

    60 தொகுதிகள்

    60 தொகுதிகள்

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாஜகவுக்கு வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட சில புள்ளி விவரங்கள் அடிப்படையில் அப்போது அந்த தொகுதிகள் ஏற்கப்பட்டன. ஆனால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவிடம் இருந்து 60 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக பாஜக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட அதிமுக கூட்டணியில் பாஜக பெற்ற தொகுதிகள் மிகக் குறைவு. ஆகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெறும் இடங்களை காட்டிலும் அதிமுக கூட்டணியில் தாங்கள் அதிக இடங்களை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் தமிழக பாஜகவினர். சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் கறாராக இருப்பது என்பது பாஜகவின் நிலைப்பாடு.

    கூட்டணியில் தொடர்கிறதா?

    கூட்டணியில் தொடர்கிறதா?

    இதனிடையே அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக இப்போது கூட்டணியில் தொடர்கிறதா இல்லையா என்பது அதிமுகவினருக்கே தெரியாது. காரணம் சமீபகாலமாக தமிழக அரசுக்கு எதிராக பாய்ந்து வருகிறார் விஜயகாந்த். அதற்கு உதாரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற அரசின் முடிவை காலம் கடந்த முடிவு என்றும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எனவும் விமர்சித்து கடுமையாக சாடியிருந்ததை குறிப்பிடலாம்.

    டிசம்பருக்கு பிறகு

    டிசம்பருக்கு பிறகு

    பாஜக 60 தொகுதிகளை எதிர்பார்க்கும் தகவல் அதிமுகவுக்கு தெரிந்தும் தெரியாதது போலவே காட்டிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கூட்டணி, சீட் பங்கீடு பற்றி பேச உகந்த சூழல் இல்லை என்றும் டிசம்பரில் பார்த்துக்கொள்வோம் எனவும் அதிமுக தரப்பில் பதில் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    in tamilnadu assembly election, bjp targeting 60 constituencies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X