சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கோரிய வழக்கு.. பள்ளிகல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனம் ஒன்றில் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் 4 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

In the case of CCTV, GPS fixed in school vechiles .. High Court order School Education department will respond

இச்சம்பவம் தொடர்பாக நடத்துனர் கைது செய்யபட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், மூலமாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது போல சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க கோரி, தமிழக அரசுக்கு கடந்த மாதம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கைக்கு, தமிழக அரசு செவி சாய்யக்கவும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி! திமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி!

இந்த வழக்கு விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Chennai High Court has ordered the school department in the case demanding that the GPS equipment and CCTVs be compulsory in school buses and vans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X