சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி… தேமுதிக வந்தா சேத்துக்குவோம்.. சரத்குமார் தடாலடி!

Google Oneindia Tamil News

சென்னை:லோக்சபா தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியானது பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துடன் பிரச்சாரத்தை சென்னையில் துவக்கி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உள்ளன. அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வருவதாக தேமுதிக அறிவித்து இருக்கிறது.

In the lok sabha elections, samthuva makkal katchi would stand alone says sarathkumar

இந் நிலையில், லோக்சபா தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி இடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இந்த முடிவு கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது என்றும் தேமுதிகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவில் ஐக்கியமான வில்லன் + காமெடி நடிகர் ரவி மரியா... ! அதிமுகவில் ஐக்கியமான வில்லன் + காமெடி நடிகர் ரவி மரியா... !

முன்னதாக, சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து விஜயகாந்திடம் பேசினேன்.

மேலும் ஒத்த கருத்துடையவர்கள் கூட்டணியில் ஒன்றிணைய வாய்ப்புள்ளது. விரைவில் கட்சியின் கூட்டத்தில் விவாதிக்க தேர்தலில் தமது முடிவு என்ன என்பதை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, தற்போது தனித்து போட்டி என்றும் அவர் அறிவித்துள்ளார்.

English summary
Our party will contest loksabha election as independant says samathuva makkal katchi leader sarathkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X