சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விட திட்டம் வகுக்க குழு.. ஐகோர்ட் யோசனை

Google Oneindia Tamil News

சென்னை: பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்க குழு ஒன்றை அமைக்கலாமே என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளது.

வீணாகும் நீரை குளங்களுக்கு திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்த, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி கொள்ளவும் உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

In the rainy season, waste water to divide to lake and pools.. highcourt said idea

ஈரோடு மாவட்டத்தில் ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக ஏரிகளுக்கு திருப்பிவிடுவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.

மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்புமரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு

இதற்கு ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க ஒப்புதல் தெரிவித்தார். கடந்த 2015-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டும் திட்டம் துவக்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கு விசாரணையின் போது ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக அரசு தரப்பு கூறியது

இதனை ஏற்ற நீதிமன்றம் வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க, தடுப்பணையில் வீணாகும் கசிவு நீரை கிராமப்புற குட்டைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரசின் நடவடிக்கையை பாராட்டியது

இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலமே என்ற நீதிமன்றம், எம்.பி - எம்.எல்.ஏ மேம்பாடு நிதியைப் பயன்படுத்தி இது தொடர்பாக திட்டம் வகுக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பிடம் அறிவுறுத்தியது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டத்தை 4 வார காலங்களில் முடிக்கவும் செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

English summary
Chennai High Court has suggested to the Tamil Nadu government that a group can set up a plan to recharge the waste water in the lake and ponds during the monsoon season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X