சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. உதயநிதி போட்டியிடும் தொகுதி "இது"தானா.. ஆனால் அங்கு "அவர்" இன்சார்ஜ் ஆச்சே.. அனல் பறக்குமே!

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி கசிந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி எதுவாக இருக்கும் என்ற ஆர்வம் கட்சிக்குள் மட்டுமல்லாமல் பரவலாகவே எழுந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்ததில் இருந்தே பலவித அதிருப்திகளை சம்பாதித்து வருகிறார்.. இவரை உள்ளுக்குள் இருக்கும் ஒருசில சீனியர்களே பொறாமையுடன் தான் பார்க்கின்றனர்.

எத்தனையோ குற்றச்சாட்டுகள் உதயநிதி மீது வைத்தாலும், எதையுமே அவர் கண்டுகொள்வதில்லை.. தன் இளைஞர் அணியை பலப்படுத்துவதிலும், துரிதப்படுத்துவதிலும், ஆர்வம் காட்டி வருகிறார். பல சமயம் அவரது கட்சி பணியின் வேகம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மதிப்பு

மதிப்பு

இந்நிலையில், இவர் போட்டியிட போகும் தொகுதி என்ற தகவல் கசிந்து வருகிறது.. கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகியபோது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து விட்டு சென்றார்.. தன்னுடைய ஆயிரம் விளக்கு தொகுதியல் உதயநிதியை நிறுத்த போவதால்தான், தனக்கு மதிப்பு குறைந்துவிட்டதாகவும், அதனாலேயே தான் கட்சியில் இருந்து விலக போவதாகவும் சொல்லி இருந்தார்.

 ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன்

தற்போதுள்ள செய்தியின்படி, உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ.அன்பழகன்.. அவரது மறைவுக்கு பிறகு, அந்த தொகுதி காலியாகத்தான் உள்ளது... அங்குதான் உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனராம்,

திமுக

திமுக

அத்துடன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் ஓட்டுக்கள் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளையும் உதயநிதி தரப்பினர் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், இதற்கு திமுகவுக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதாம்.. மாவட்ட நிர்வாகி ஒருவர், மறைந்த முன்னாள் அமைச்சர் வாரிசை போட்டியிட வைக்க முயன்று வருகிறாராம்.

உதயநிதி

உதயநிதி

அதேபோல, திருவல்லிக்கேணியை சேர்ந்த பகுதி நிர்வாகி ஒருவர், இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.. இப்படி அந்த ஒரு தொகுதிக்காக ஏராளமான போட்டிகள் உருவாகி உள்ளன. எங்கு போட்டியிடுவது என்பதை உதயநிதிதான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், கட்சிக்குள் அதிருப்திகள் எழுந்து வருவது பூசலையே அதிகரிக்கும் என்கிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர்

ஒருசிலர், ஜெ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அந்த தொகுதியில் நின்றால் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் கருத்து சொல்கிறார்கள்.. மேலும் சிலர், இவர் அவருடைய தாத்தா தொகுதியான திருவாரூர்ல போட்டியிடலாமே.. அங்கதானே பிரச்சாரத்தை தொடங்கினார்.. அங்கேயே போட்டியிட்டால் வெற்றி ஈஸியாக கிடைக்கும் என்கின்றனர்..

 அண்ணாமலை

அண்ணாமலை

ஆனால், உதயநிதி எங்கு போட்டியிட்டாலும் சரி, அவரை எதிர்த்து பாஜக ஸ்டிராங் நபரை நிறுத்துவதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம்.. அநேகமாக அது அண்ணாமலையாக இருக்கும் என்கிறார்கள்.. ஏற்கனவே கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து குஷ்பு நிறுத்தப்படலாம் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

 பொறுப்பாளர்

பொறுப்பாளர்

அதாவது ஸ்டாலினுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்ததைப் போல தோற்கடிக்க வேண்டுமென்பது பாஜகவின் திட்டம்... அதுமாதிரியே உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக அண்ணாமலையை நிறுத்தும் எண்ணம் உள்ளதாம்.. இதையெல்லாம் கணக்கில் வைத்துதான், சேப்­பாக்­கம்-திரு­வல்­லிக்­கேணி தொகு­திக்கு குஷ்புவை பொறுப்­பா­ள­ராக நியமித்துள்ளதாக தெரிகிறது.. இதெல்லாம் பார்த்தால், இந்த முறை தேர்தல் படுவிறுவிறுப்பாக இருக்கும்போல தெரிகிறது!

English summary
In which constituency is Udayanidhi Stalin going to contest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X