சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாயிண்ட்"டுடன் வந்த ஓபிஎஸ்.. ரெடியான எடப்பாடி பழனிசாமி.. ஹைகோர்ட்டில் பொதுக்குழு வழக்கு ஆரம்பம்

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்றைய தினம் காலை நடைபெறுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் துவங்கியது. ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை 2வது நாளாக விசாரித்து வருகிறார்.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓபிஎஸ் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை 2 வாரங்களுக்குள் நடத்தி உத்தரவிட வேண்டும் என்று, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையில், நேற்றைய தினம் விசாரணை தொடங்கியது.

மத்திய அரசு அல்ல.. அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம்.. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு! மத்திய அரசு அல்ல.. அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம்.. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!

எடப்பாடி

எடப்பாடி

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணனும், ஓபிஎஸ் தரப்பில் குருகிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர்.. இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கியபோதும் தேர்வு முறையில் மாற்றமில்லை, பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததிலும் தவறில்லை என்று வாதிட்டார்.

Recommended Video

    திமுக ஆட்சி நெஜமாவே ஈபிஎஸ் சொல்ற மாதிரி ஊழல் ஆட்சியா?
     தமிழ்மகன் உசேன்

    தமிழ்மகன் உசேன்

    இதனைக் கேட்டநீதிபதி, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து விளக்கம் தர வேண்டும் என்றும், அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்பது குறித்தும் விளக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.. மேலும், தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தரலைவராக நியமிக்கப்பட்டாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, எடப்பாடி தரப்பில், "ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து கையெழுத்திட்டதன் அடிப்படையில் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார் என்று பதிலளிக்கப்பட்டது.

     தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

    தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

    இதற்கு பிறகு, ஓபிஎஸ் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய பிறகுதான் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. 2017ம் ஆண்டு கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். 2016 ம் ஆண்டு சசிகலா சிறை சென்றதால், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று 2017ம் ஆண்டு பொதுக்குழு கூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

    ஜெயச்சந்திரன்

    ஜெயச்சந்திரன்

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவில் விதியை பின்பற்றாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியதுடன் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்... அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணை துவங்கி உள்ளது. நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை 2வது நாளாக விசாரித்து வருகிறார்.. இரு தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    English summary
    In whose favor is the High court order going to come and aiadmk general committee case hearing today அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்றைய தினம் காலை நடைபெறுகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X