சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழகு தமிழ் பெயரான இன்பதுரையை கிண்டல் செய்வதா.. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி

Google Oneindia Tamil News

அழகு தமிழ் பெயரான இன்பதுரையை கிண்டல் செய்வதா.. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி

சென்னை: அழகு தமிழ் பெயரான இன்பதுரையை கிண்டல் செய்வதா என ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் இன்பதுரை.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இன்பதுரை 69,596 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இம்ரான்கானுக்கு எச்சரிக்கை.. மலேசியா, துருக்கிக்கு கோரிக்கை.. காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கறார்இம்ரான்கானுக்கு எச்சரிக்கை.. மலேசியா, துருக்கிக்கு கோரிக்கை.. காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கறார்

வழக்கு

வழக்கு

அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்பாவு

அப்பாவு

இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட அக்டோபர் 23-ஆம் தேதி வரை தடை விதித்தது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுதான் வெற்றி பெறுவார்.

இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார்

இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார்

மறு எண்ணிக்கையின் போது இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என ரைமிங் கூறி ஸ்டாலின் கலாய்த்தார். இதற்கு இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்பதுரை கூறுகையில் இன்பதுரை என்ற அழகான தமிழ் பெயரை கிண்டல் செய்வதா.

தந்தையே உயர்ந்தவர்

தந்தையே உயர்ந்தவர்

தமிழின தலைவரான உங்கள் தந்தை உங்களுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டியுள்ளார். தமிழ் பற்றுடன் எனக்கு தமிழ் பெயர் வைத்த என் தந்தையே உயர்ந்தவர் என்றார்.

English summary
Inbadurai says that Stalin is teasing a beautiful tamil name by saying Inbadurai became Thunbadurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X