சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு விஜயை அட்மிட் செய்த வருமான வரித்துறை.. திடீர் விசாரணை.. என்ன பின்னணி?

நடிகர் ரஜினிகாந்த் மீது இருந்த வருமான வரித்துறை வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், நடிகர் விஜயை வருமான வரித்துறை குறி வைத்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது இருந்த வருமான வரித்துறை வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், நடிகர் விஜயை வருமான வரித்துறை குறி வைத்துள்ளது. விஜயிடம் திடீரென்று வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது. மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து தற்போது நடிகர் விஜயிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

    இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரிடம் நேரில் சம்மன் அனுப்பினார்கள். அதோடு தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார்.

    வருமான வரி வழக்கிலிருந்து ரஜினிகாந்த் தப்பியது எப்படி? தடதடக்கும் பின்னணி இதுதான்! வருமான வரி வழக்கிலிருந்து ரஜினிகாந்த் தப்பியது எப்படி? தடதடக்கும் பின்னணி இதுதான்!

    ரஜினி எப்படி

    ரஜினி எப்படி

    முன்னதாக நடிகர் ரஜினிகாந்திடம் 2002-2005 வருடங்களில் வருமான வரித்துறை இதேபோல்தான் கெடுபிடியாக இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அப்போது ரஜினிகாந்த் செலுத்தாத வரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கிய வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று ரஜினிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.

    என்ன அபராதம்

    என்ன அபராதம்

    அதன்படி 2002 - 05ம் ஆண்டில் 66 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ரஜினி இதை செலுத்தவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

    பெரிய வழக்கு

    பெரிய வழக்கு

    அதாவது ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதித்துள்ளோம். இதெல்லாம் பெரிய வழக்கு இல்லை. இப்போதெல்லாம் 1 கோடி ரூபாய்க்கு குறைவாக அபராதம் விதித்தால் வழக்கு பதிவு செய்வது இல்லை. அதனால் வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்று கூறி, ரஜினி மீதான வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து வருகிறார்.

    ஆதரவு

    ஆதரவு

    சிஏஏ தொடங்கி அனைத்து விஷயங்களிலும் ரஜினி மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால்தான் அவர் மீது அரசு கரிசனம் காட்டுகிறது என்று நெட்டிசன்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் தற்போது விஜய் குறி வைக்கப்பட்டு இருக்கிறார். விஜய் பல இடங்களில் அரசுக்கு எதிராக பேசி உள்ளார். முக்கியமாக மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

     விஜய் விமர்சனம்

    விஜய் விமர்சனம்

    மெர்சல் படத்தில் பாஜக அரசை விமர்சனம் செய்தார் என்று அவரை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அவரை ஜோசப் விஜய் என்று கூட பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் அப்போது இரண்டு தரப்பிற்கும் இடையில் பிரச்சனை வந்தது. இந்த நிலையில்தான் வருமான வரித்துறை மூலம் விஜய் குறி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் அளிக்கப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

     என்ன அழுத்தம்

    என்ன அழுத்தம்

    ஆனால் இதற்கு அரசியல் காரணங்கள் இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் சிலர் தெரிவிக்கிறார்கள். இது சாதாரண வருமான வரித்துறை சோதனையும், அதை தொடர்ந்த நடவடிக்கையும்தான். விஜய் குறி வைக்கப்படவில்லை. ஏஜிஎஸ் விசாரணையை தொடர்ந்து இது செய்யப்படுகிறது. இன்னும் சில முக்கியமான நபர்கள் விரைவில் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் அரசியல் இல்லை என்று கூறியுள்ளனர்.

    English summary
    Income Tax gave exemption in the Rajini Kanth scenario and starts focusing on Actor Vijay.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X