சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழனிக்கு போன வருமான வரித் துறை அதிகாரி.. அவரது காரை பயன்படுத்தி டிரைவர் செய்த பலே காரியம்!

Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித் துறை அதிகாரியின் காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வருமான துறை ஆணையரின் போர்டு வைத்த காரில் பயணம் செய்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மாதம் ரூ .1,42,400 வரை சம்பளம்.. பட்டப் படிப்பு போதும்.. வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு மாதம் ரூ .1,42,400 வரை சம்பளம்.. பட்டப் படிப்பு போதும்.. வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு

போலீஸார்

போலீஸார்

அப்போது அவர்களில் ஒருவர் தப்பியோடினார். பின்னர் மற்ற இருவரை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொரட்டூரை சேர்ந்த வாணி, முருகன் என தெரியவந்தது. தப்பியோடிய நபர் பிரகாஷ் என்றும் தெரியவந்தது.

பெசன்ட் நகர்

பெசன்ட் நகர்

வாணியின் கணவர் பெசன்ட் நகரில் உள்ள வருமான வரித் துறை அதிகாரியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் பழனியிலுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றதால் அவரது காரை பயன்படுத்தி கஞ்சா வியாபாரம் செய்தது தெரியவந்தது.

வாணி வீடு

வாணி வீடு

அடுத்து கொரட்டூரில் உள்ள வாணி வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாஷை போலீஸார் தேடி வருகிறார்கள். இதுவரை இவர்கள் வேறு எங்கெல்லாம் கஞ்சாவை கடத்தினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்திய கும்பல்

கடத்திய கும்பல்

மேலும் இவர்களுக்கு பின்னர் வேறு யாரேனும் கும்பல் இருக்கின்றனரா, இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைக்கிறது போன்ற தகவல்களையும் போலீஸார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். இந்த வருமான வரித் துறை அதிகாரியின் காரை பயன்படுத்தி இவர்கள் கஞ்சா கடத்தியது இதுதான் முதல்முறையா இல்லை ஏற்கெனவே நிறைய முறை கடத்தியுள்ளனரா போன்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Chennai Income Tax Officer's car was used by his driver for cannabis smuggling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X