சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு விமானத்தில் சென்றாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்.. டிஜிபி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு விமானத்தில் வருவோர், ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள் என்று அந்த மாநில போலீஸ் டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

    தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு சாலை மார்க்கமாக வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுதலுக்கு உள்ளாவார்கள் என்று அந்த மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    Incoming domestic flight passenger from Tamil nadu will undergo 14 days Quarantine in Karnataka

    இதையடுத்து பலரும் கர்நாடக எல்லை வரை கார்களில் சென்று விட்டு மறுபடி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, மே 25ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட உள்ளது. இப்போது கர்நாடக போலீஸ் டிஜிபி பிரவீன் சூட், ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழகம், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கர்நாடகா வரும், உள்நாட்டு விமானப் பயணிகள் 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பின், 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். இவ்வாறு கர்நாடக, போலீஸ், டிஜிபி தெரிவித்துள்ளார்.

    நிர்வாக தோல்வியை திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது.. திமுக எதற்கும் அஞ்சாது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்நிர்வாக தோல்வியை திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது.. திமுக எதற்கும் அஞ்சாது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

    வீட்டு தனிமைப்படுத்துதல் என்பது அவரவர் வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று பொருளாகும். மற்றொரு தனிமைப்படுத்துதல் என்பது, அரசு ஏற்பாடு செய்துள்ள ஓட்டல் அறைகளில் தங்குவது. இந்த ஓட்டல் அறைகளில் சுத்தம், சுகாதாரம் கிடையாது, அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றெல்லாம் புகார்கள் வெளியாகியுள்ளன.

    Incoming domestic flight passenger from Tamil nadu will undergo 14 days Quarantine in Karnataka

    இந்த நிலையில்தான், கர்நாடக டிஜிபி இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் வருவதற்கு மிகுந்த யோசனையுடன் உள்ளனர். இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ஏனெனில், பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கணிசமாக தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். இப்போது மறுபடியும் நிறுவனங்கள் திறந்து உள்ளதால் அவர்கள் இங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால், தனிமைப்படுத்துதல் விதிமுறை காரணமாக, வர முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Incoming domestic flight passenger from Maharashtra, Rajasthan, Delhi, Gujarat, Tamil Nadu, Delhi & Madhya Pradesh will undergo 7 day institutional Quarantine followed by home quarantine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X