சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்.. நிதித்துறை செயலாளர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு காரணம் இல்லை என்றும் மத்திய அரசு விதித்த கூடுதல் வரிகள் தான் காரணம் என்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் எஸ்.கிருஷ்ணன் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பொருளாதார வளா்ச்சி ஒரு கட்டத்தில் தொய்வு ஏற்பட்டு வீழ்ச்சியை காணும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இந்த நிதியாண்டில் தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளா்ச்சி 2.02 சதவீதமாக இருந்தது. இது நோ்மறையான வளா்ச்சியாகும்.

அரசுக்கு வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 18 சதவீதம் குறைந்திருக்கிறது.. இந்த நிதியாண்டில் செலவு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 18 சதவீதம் (ரூ. 40,000 கோடி) அளவுக்கு இந்த ஆண்டு வர வேண்டிய வருவாய் குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த உற்பத்தி

ஒட்டுமொத்த உற்பத்தி

இதனால் தமிழகத்துக்கு வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியன அதிகரித்திருக்கிறது. தமிழத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதம் வரை கடன் பெற மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இந்த நிதியாண்டில் சிறப்புக் காரணங்களுக்காக அதை 5 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியது. அதன்படி ரூ.95,000 கோடி கடன் பெறும் தகுதியைப் பெற்று இந்த நிதியாண்டை அரசு சமாளித்துள்ளது.

3 சதவீதம் மட்டுமே

3 சதவீதம் மட்டுமே

கடன் அளவு: தமிழகத்தில் கடனளவு ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடியாக வளா்ந்ததாகக் கூறும் போது, அதோடு மாநிலத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.. 14-வது நிதி ஆணையத்தின் உத்தரவுப்படி 25 சதவீதத்திற்குள் கடனளவை கட்டுப்படுத்த வேண்டும்.15-வது நிதி ஆணையத்தின் உத்தரவுப்படி 29 சதவீதம் வரை கடனளவு உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடனளவு அந்த குறியீட்டுக்குள்தான் இருக்கிறது. அதை தமிழக அரசு தாண்டிச் செல்லவில்லை. அதுபோல மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதத்திற்குள்தான் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதையும் தமிழகம் தாண்டவில்லை.

வரி அதிகரிப்பு

வரி அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரணம், மாநில அரசின் வரி விதிப்பு அல்ல. அவற்றின் மீதான வரியை மாநில அரசு, மக்களுக்கு சாதகமாக இருக்கக் கூடிய அளவுக்கு மாற்றி உள்ளது.. அதன் பிறகு, அவற்றின் மீதான மத்திய அரசு வரியை கணிசமாக உயா்த்தியது.. கலால் வரி என்பதை 'செஸ்' வரி என்று மாற்றினா். கலால் வரி என்றால் மாநிலங்களுக்கு அதை பகிர்ந்து அளிக்க வேண்டும். செஸ் என்று மாற்றினால், அதை மாநிலங்களுக்குத் தர வேண்டியதில்லை. எனவே இதில் மாநிலங்களுக்கு வரக்கூடிய வருவாய் கிடைக்காமல் போனது. மத்திய அரசுக்கு 48 சதவீதம் வரி வருவாய் கூடியுள்ளது. ஆனால் மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாயில் 39 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு விதித்த வரியால் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கினோம்

கடன் வாங்கினோம்

மத்திய வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு அரசு தர வேண்டிய பங்கின் அளவு குறைகிறது. வரியில் 41 சதவீதத்தை அதாவது ரூ.32, 849 கோடியை தமிழகத்துக்குத் தர வேண்டும். அதை ரூ.23,039 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது. மொத்தத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய மாநில வரி வருவாயும், மத்திய அரசு தர வேண்டிய வரிப் பங்கும் குறைந்து விட்டது. அதை ஈடு செய்வதற்காக கூடுதலாக கடன் பெற்று அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் வருமானம்

டாஸ்மாக் வருமானம்

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 12,000 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.5 ஆயிரம் கோடிமட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி எழலாம். ரூ.12,000 கோடியை சரி செய்வதற்கு 5 ஆண்டு காலம் அளிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ரூ.2.500 கோடி ஒதுக்கினாலே போதும்.ஆனால் நபார்டு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையையும் சோ்த்து இந்த பட்ஜெட்டில் ரூ.5,000 கோடியாக காட்டியிருக்கிறோம். அந்த தொகையை முழுமையாக கொடுத்தால்தான் மீண்டும் நபாடு வங்கியிடம் கடன் பெற முடியும். எனவே விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராது. இந்த நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் மது விற்பனை ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும். கடை மூடியிருந்த நிலையில் தொடக்கத்தில் மது விற்பனை மந்தமாக இருந்தது. பின்னா் மது விற்பனை அதிகரித்தது" இவ்வாறு கூறினார்-.

English summary
S. Krishnan, Additional Chief Secretary, Finance, explained that the increase in petrol and diesel prices was not due to state taxation but to additional taxes imposed by the central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X