குடும்பம், பணிச்சூழலால் நோய்களுக்கு ஆளாகும் பெண்கள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்
சென்னை: பெண்களின் முன்னேற்றம், சம உரிமை குறித்துப் பேசும் சமூகம், அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என பெண்ணியல் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவ வளாகத்தில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த ப்ளூம் மருத்துவமனையை, துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள், "பெண்களின் இன்றைய ஆரோக்கியம் மற்றும் அவர்களின் மருத்துவ தேவை குறித்து விவாதித்தனர்.
அப்போது பேசிய பெண்கள் நல மருத்துவர் கவிதா கவுதம், "வீடு, குடும்பம் என இருக்கும் பெண்களும், பணிக்குச் செல்லும் பெண்களும் கடும் மன உளைச்சலிலும், மன அழுத்தத்திலும் உள்ளதாக கூறினார்.
அப்பார்ட்மென்ட்டில் இந்த பெண் செய்த காரியத்தை பார்த்தீங்களா..பாத்ரூமில்

மும்முனைத்தாக்குதல்
உடல், மனம் மற்றும் உணர்வுகள் என மும்முனைத் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். முக்கியமாக ஹார்மோன் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இது, அவர்களுக்கு தொடர்ச்சியான பல நோய்களை உண்டாக்குகிறது. இதனால், அவர்களின் மொத்த வாழ்க்கையும் குறைபாடுடையதாக மாறி விடுகிறது.

நோய் பாதிப்புகள்
பெண்கள் பருவ வயதை அடையும்போதே, சீரற்ற மாதவிடாய், நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள் என சிக்கல்கள் வந்து விடுகின்றன. இதற்கு மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் மட்டும் தீர்வாகாது. வாழ்வியல் முறைகளைமாற்ற வேண்டும்.

உணவே மருந்து
உணவே மருந்தென்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான அனைத்துத் தீர்வுகளையும் கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை முறை இன்றைய நிலைக்கு அவசியம் என்று கூறினார்.

சுகாசினி மணிரத்னம்
இந்நிகழ்வில், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்தைக் காக்க, திரைக்கலைஞர் சுஹாசினி மணிரத்தினம் நடத்தும் நாம் அறக்கட்டளையில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்தைக் காக்க நிதியுதவியும், மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது. மருத்துவமனை அலுவலர் அனிதா கிருஷ்ணசாமி, மருத்துவ இயக்குனர் சித்தரஞ்சன் உள்ளிட்ட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.