சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா..ஆலோசிக்கும் முதல்வர் ஸ்டாலின் - லாக்டவுன் வருமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா வீரியம் குறையாமல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் ஓராளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Increasing Corona in TN Consulting Chief Minister MK Stalin Will Lockdown come?

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 2000ஆயிரம் பேரை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை.

31வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை. கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வகுப்பறைகள் காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் லாக்டவுன் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா.. 2,069 பேருக்கு புதிதாக தொற்று - 11,094 பேருக்கு சிகிச்சை தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா.. 2,069 பேருக்கு புதிதாக தொற்று - 11,094 பேருக்கு சிகிச்சை

English summary
Chief Minister M.K.Stalin will hold a consultation on Corona prevention measures tomorrow. Health officials participate in this advisory meeting. It is reported that Chief Minister Stalin will discuss the imposition of additional restrictions with the concerned authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X