சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, கோவை, ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கவனம் மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோவை மற்றும் ஈரோட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. 3வது அலை தொடங்கவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக சரிந்து தற்போது 1800 என்கிற அளவில் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மீணடும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது,

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்தாலும் (பெரிய அளவில் குறையவில்லை) சென்னை மற்றும கோவையில் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு நாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு

உயருகிறது

உயருகிறது

சென்னையில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 126 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 164 ஆக அதிகரித்துள்ளது..

அதிகரிக்கிறது

அதிகரிக்கிறது

கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள கோவையில் 164ல் இருந்து 179 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கடந்த 25ம் தேதி 130 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இன்றைய பாதிப்பு

இன்றைய பாதிப்பு

கொரோனா பாதிப்பு வீழ்ச்சி அடைவ்தும் தமிழகத்தில் பெரிய அளவில் அண்மைக்காலமாக இல்லை. 2 ஆயிரத்தை ஒட்டியே பாதிப்பு இருந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25ம் தேதி இந்த எண்ணிக்கை 1808 ஆக இருந்தது. இதை ஒப்பிட்டு பார்த்தால் குறைந்துள்ளது என்றுசொன்னாலும் பெரிய அளவில் தொற்று குறையவில்லை என்பது தெரியும்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேநேரம் ஆறுதலான விஷயம் என்ன வென்றால் கடந்த ஆக்டிவ் நோயாளிகன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 25ம் ஆம் தேதி ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை23,364 ஆக இருந்தது. ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 21,521ஆக குறைந்துள்ளது.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

சமூக இடைவெளியை பின்பற்றுவத, கூட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, முககவசம் அணிவது போன்றவை மட்டும கொரோனா வராமல் தடுக்க உதவும். எனவே கொரோனா நடத்தை விதிகளை இனி மீறாமல் சுதாரித்து செயல்பட்டால் 3வது அலையில் தப்பிக்க முடியும். கொரோனாவை வெ;லல விரைவக தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்த தீர்வு ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிய வேண்டியதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மக்களே மீண்டும் கொரோனா உயர தொடங்கி உள்ளது. எனவே கவனமாக இருந்தால் மட்டுமே நம்மை காக்க முடியும்.

English summary
Increasing corona cases in Chennai, Coimbatore and Erode. Thus it is necessary for people to be vigilant. It is feared that the 3rd wave has started.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X